புதுடில்லி: கவுஹாத்தி ஐ.ஐ.டி., மாணவர்கள், மூச்சு விட சிரமப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவ, குறைந்த செலவில், 'இன்டுபேஷன்' பெட்டியை உருவாக்கியுள்ளனர்.
நோயாளியின் வாயில் டியூப் செலுத்தி, மூச்சு குழாய்க்குள் இணைக்க இந்த பெட்டி உதவுகிறது. இதை, நோயாளியின் தலைக்கு பின்புறம்வைத்து, 'வெண்டிலேட்டர்' எனப்படும் செயற்கை சுவாச கருவியுடன் இணைத்து விடலாம். இதன் மூலம், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது, மருத்துவர்களுக்கு வைரஸ் பரவுவது தடுக்கப்படும். விரைவில், ஹரியானாவில் இந்த சாதனத்தின் உற்பத்தி துவங்க உள்ளது.

வலைதளம் மூலம் நிதி திரட்டி, தலா, 2,௦௦௦ ரூபாய் அடக்க விலையுள்ள இன்டுபேஷன் பெட்டியை, அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க, மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE