டுவிட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்வதை நிறுத்திய வெள்ளை மாளிகை

Updated : ஏப் 29, 2020 | Added : ஏப் 29, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
The White House, Modi, UnFollow, Twitter, America, india, pm modi, official Twitter page, வெள்ளைமாளிகை, அன்பாலோ, டுவிட்டர், பின்தொடர்தல், அமெரிக்கா, பிரதமர், மோடி

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை பின்தொடர்ந்தது. ஆனால், தற்போது பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது.

22 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமான வெள்ளை மாளிகை, கடந்த சில நாட்களுக்கு இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவை பிரதிபலிக்கும் விதமாக பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் ஆகிய டுவிட்டர் கணக்குகளை பின்தொடர்ந்தது. இதன்மூலம் வெள்ளை மாளிகை பின்தொடர்பவர்களில் அமெரிக்கர்கள் அல்லாத கணக்குகளாக இவை இடம்பெற்றன.


latest tamil news



இந்நிலையில், தற்போது மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கணக்குகளை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது. தற்போது வெறும் 13 கணக்குகளை மட்டுமே பின்தொடர்கிறது. அவை அனைத்தும் அமெரிக்க நிர்வாகத்திற்கும், அதிபர் டிரம்புக்கும் தொடர்புடையவை ஆகும். ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்து ஏற்றுமதி செய்து அமெரிக்காவிற்கு இந்தியா உதவியபோது, பின்தொடர்ந்த வெள்ளை மாளிகை, உதவி கிடைத்ததும் தற்போது, அதனை நிறுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஏப்-202020:25:57 IST Report Abuse
Tamilan இந்தியாவை பின்தொடர்வதால் அவர்களுக்கு என்ன லாபம்? . இந்தியர்களைப்போல் அவர்களால் இருக்கமுடியாது . அதேபோல்தான் , இந்தியாவும் அவர்களை பின்தொடர்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும் . தனக்கு நாட்டுக்கு ஒத்துவராத மற்ற நாடுகளை பின்தொடர்வது , அவர்களின் கொள்கைகளை பின்பற்றுதல்களை இந்தியாவில் புகுத்துவது ஆகியவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூற கேட்கத்தான் முடியும் . ஆனால் அந்நிய மோகத்தில் உள்ளவர்களால் இதை செய்ய முடியாது .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-ஏப்-202020:15:08 IST Report Abuse
Natarajan Ramanathan நான்கூடத்தான் டுவிட்டரில் டொனால்ட் ட்ரம்பை பின்தொடர்வதை நிறுத்தி விட்டேன். இதெல்லாம் ஒரு நியூசா??
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
29-ஏப்-202020:14:59 IST Report Abuse
Abbavi Tamilan இனி சீனா அதிபரும், ட்ரெம்பும் இந்தியா பக்கமே வரமாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X