புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார விளைவுகள் குறித்து காங்.எம்.பி. ராகுல் பல்வேறு வல்லுனர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று துவக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு 1008 பேர் பலியாகியுள்ளனர். 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக மே. 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவின் , சுகாதார மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள விளைவுகள் , சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து காங். எம்.பி. ராகுல், பல்வேறு வல்லுனர்கள், வெளிநாட்டு நிபுணர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை துவக்க உள்ளார்.
அதன்படி இன்று இந்தியாவில் பொருளாதார பாதிப்புகள், சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் கலந்துரையாட உள்ளதாகவும், தொடர்ந்து வாரத்தில் இரண்டு முறை அல்லது ஒரு முறை பல்வேறு துறை வல்லுனர்களிடம் ராகுல் கலந்துரையாடுகிறார் என காங். பொதுச்செயாளர் ரஞ்சித் சூரேஜ்வாலா தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE