அரசு ஊழியர் ஊதியம், 'கட்' கேரளாவில் அவசர சட்டம்

Updated : ஏப் 30, 2020 | Added : ஏப் 30, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
coronavirus, covid 19, kerala news, kerala coronavirus,
அரசு ஊழியர், ஊதியம், 'கட்' ,கேரளா, அவசர, சட்டம்

திருவனந்தபுரம் :கொரோனா நிவாரண நிதிக்கு, கேரள அரசு ஊழியர்களின் ஆறு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்கான அவசர சட்டம், அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.

கேரளாவில், , கொரோனா நிவாரண நிதிக்காக , அடுத்த ஐந்து மாதங்களுக்கு, மாதம், ஆறு நாட்களுக்கான அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என, கேரள அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வழக்கு தொடுத்தன. இதையடுத்து, 'ஊதியம் என்பது அரசு பணியாளரின் உரிமை. மேலும், பிடித்தம் செய்யப்படும் ஊதியம், எப்போது திரும்பத் தரப்படும்; எவ்வகையில் செலவிடப்படும் என்ற விபரத்தை அரசு அறிவிக்கவில்லை.


latest tamil news
'அதனால், அரசு ஊழியர்களின் ஊதிய பிடித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று கேரள அமைச்சரவை கூடி, அடுத்த ஐந்து மாதங்களுக்கு, அரசு ஊழியர்களின் ஆறு நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கு, அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்தது .அவசர சட்டம் தொடர்பான தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த உடன், நடப்பு ஏப்ரல் மாத ஊதியத்தில், ஆறு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
30-ஏப்-202019:15:19 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அகவிலைப்படி மட்டும் குறைத்த தமிழக முதல்வரை விமர்சித்த ஸ்டாலின் கேரள முதல்வரை விமர்சிக்க தைரியமுண்டா. 6 நாள் சம்பளம் என்பது 20%. பாவம் ஸ்டாலினுக்கு இந்தக் கணக்கை சொல்லவில்லையோ
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
30-ஏப்-202016:31:18 IST Report Abuse
ஆரூர் ரங் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் . இது பழைய கம்யூனிஸ்ட் கோஷம்
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
30-ஏப்-202016:01:41 IST Report Abuse
SIVA G  india அவசர சட்டம் சரிதான் ஊழல்வாதிகளின் சொத்துகளை முடக்கி அரசு கஜானாவில் சேர்த்த பின்னும் பற்றாகுறையானல் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடிப்பதுதான் நியாயம்.ஏனென்னால் உழைத்தற்கு கூலி இல்லை என்றால்,உழைக்காமல் கொள்ளையடித்த ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வது தவறல்லவே. மத்திய அரசு இதை செய்து மாநில அரசுகளுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X