பொது செய்தி

இந்தியா

கொரோனா போராட்டத்தால் உயர்ந்த பிரதமர் மோடியின் செல்வாக்கு

Updated : ஏப் 30, 2020 | Added : ஏப் 30, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
PM, Modi, popularity, covid-19, India, India fights corona, coronavirus, பிரதமர்,மோடி,புகழ்,செல்வாக்கு, Narendra Modi, PM Modi, US, Survey, Prime Minister, corona, corona outbreak, corona fight, corona cases, Morning Consult

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு இடையில், பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமாக 'மார்னிங் கன்சல்ட்' நடத்திய ஆய்வில், ஜன.,7ம் தேதி பிரதமர் மோடியின் புகழ் 76 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்.,21ம் தேதி நிலவரப்படி அவரது செல்வாக்கு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஐஏஎன்எஸ்-சி வோட்டர்ஸ் கோவிட்19 டிராக்கர் அமைப்பு நடத்திய ஆய்வில், பிரதமர் மோடி தலைமை மீதான நம்பிக்கை, மார்ச் 25ம் தேதி 76.8 சதவீதமாக இருந்தது. ஏப்.,21ம் தேதி அது 93.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்திய பொருளாதாரத்தில் தொய்வு, வங்கி நிர்வாக குளறுபடிகள், டில்லி வன்முறை, சிஏஏ., சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால், கடந்த மார்ச் மாதம், பிரதமர் மோடியின் செல்வாக்கு சிறிது குறைந்திருந்தது. ஆனால் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்த பின், அவரது செயல்பாடு, கொரோனாவுக்கு எதிரான போரில் தன்மை முன்னிலைப்படுத்தி கொண்டது, முக்கிய அறிவிப்பு வெளியீடு போன்றவை, அவரை உலக அளவில் பெரிய தலைவராக உருவாக்கி உள்ளது.
மேலும் உலக நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் உதவி செய்வது, கொரோனாவை குணப்படுத்துவதாக நம்பப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது போன்றவற்றால் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது.

கொரோனா பிரச்னைக்கு பின், மோடியின் செல்வாக்கு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகள், வேலை இழப்பு, சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதை, மோடி எவ்வாறு சமாளித்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என்பதை பொறுத்து அவரது செல்வாக்கு இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
30-ஏப்-202022:24:45 IST Report Abuse
தமிழ் வேந்தன் கடலிலேயே இல்லையாம்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஏப்-202022:24:21 IST Report Abuse
g.s,rajan What about the Testing during Lock down,nothing is done through out India So it is a mere Waste. To reduce Corona Virusspread Testing, Testing, Testing is highly required now,nothing is Important. g.s.rajan Chennai.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஏப்-202022:18:44 IST Report Abuse
g.s,rajan "Nobel Prize" for Modiji . g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X