கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை: மக்களிடம் மோடி செல்வாக்கு உயர்வு

Updated : மே 02, 2020 | Added : ஏப் 30, 2020 | கருத்துகள் (88) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கையால், மக்களிடம் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த, 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு நடத்தி கூறியுள்ளதாவது:இந்தியாவின் பிரதமராக, மோடி, கடந்த ஆண்டு மே, 30ல் பதவியேற்றார். இதன் பின், மக்களிடம், அவரது செல்வாக்கு சரிந்தது.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை: மக்களிடம் மோடி செல்வாக்கு உயர்வு

புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கையால், மக்களிடம் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த, 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு நடத்தி கூறியுள்ளதாவது:இந்தியாவின் பிரதமராக, மோடி, கடந்த ஆண்டு மே, 30ல் பதவியேற்றார். இதன் பின், மக்களிடம், அவரது செல்வாக்கு சரிந்தது.


நடவடிக்கைமுன் எப்போதும் இல்லாத அளவில், பொருளாதார வீழ்ச்சி, டில்லி கலவரம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, நாடு முழுதும் நடந்த போராட்டங்கள் போன்றவற்றால், மோடியின் செல்வாக்கு, ஜனவரியில், 76 சதவீதமாக குறைந்தது. மார்ச் மாத துவக்கத்தில், இந்தியாவால் கொரோனா பரவத் துவங்கியது. இதைக் கட்டுப்படுத்த, மோடி எடுத்த நடவடிக்கைகளால், அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது.கடந்த மார்ச், 25ல், 76.8 சதவீதமாக இருந்த மோடியின் செல்வாக்கு, ஏப்ரல் பாதியில், 83 சதவீதமாகவும், இறுதியில், 93.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற பிரச்னைகளை, மக்கள் மறந்து விட்டனர்.மேலும், கொரோனா பரவலை தடுக்க, இந்தியா, வெளிநாடுகளுக்கு மருந்துகள் சப்ளை செய்ததன் மூலம், பிரதமர் மோடியின் மதிப்பு பெரிதும் உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மோடியை, எதிர்க்கட்சிகளால் பெரிய அளவில் விமர்சிக்க முடியவில்லை.


வைரஸ் பரவல்அமெரிக்கா போல, பரிசோதனைகள் மேற்கொள்ள முடியாத நிலையிலும், வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதும், பலி எண்ணிக்கை குறைவாக இருப்பதும், மக்களிடம், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகரிக்க வைத்துள்ளன. ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், மோடிக்கு முன் மாபெரும் சவால்கள் காத்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஊரடங்கால், பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முடங்கியுள்ளன. மே, 3ம் தேதிக்குப் பின், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதில் தான், மோடியின் திறமை அடங்கியுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி, காங்., செய்தி தொடர்பாளர், மனிஷ் திவாரி கூறுகையில், ''வைரஸ் பரவலால், நாட்டில், அரசியல் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. ''அனைவரது மனதிலும், கொரோனா பயம் தான் உள்ளது. நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பின் தான், செல்வாக்கு பற்றிய உண்மை தெரிய வரும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (88)

vennila - Dindigul,இந்தியா
02-மே-202015:17:21 IST Report Abuse
vennila அறுபத்தெட்டாயிரம் கோடிக்குமேல் வராக்கடனை தள்ளுபடி செய்தபோதே மோடிக்கு செல்வாக்கும் நாட்டுக்கு நிதி இழப்பும் ஒரே நேரத்தில் உச்சத்தை எட்டிவிட்டது.
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
03-மே-202008:28:51 IST Report Abuse
Tamilnesan வெண்ணிலாவுக்கு ஆங்கிலம் தெரியாது போலும். தற்போது தமிழில் சொல்கிறேன். தள்ளுபடிக்கும், நிறுத்தி வைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணமாக, கொரானா காரணமாக வங்கியில் வீட்டு கடன், வாகன கடன் போன்றவைகள் மாதாந்திர தவணைகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்கள் பின்பு, தவணைகள் திருப்பி கட்டவேண்டும். அதே சமயம், முன்பு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர்கள், ஒரு ருபாய் கூட திருப்பி செலுத்த வேண்டியதில்லை. தற்போது செய்துருப்பது "நிறுத்தி வாய்ப்பு". தமிழக செய்தித்தாள்கள் சில இது போன்ற வேண்டுமென்றே "தள்ளுபடி" என்ற செய்தி வெளியிட்டதின் விளைவு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது....
Rate this:
Cancel
திராவிடன் - bombay,இந்தியா
01-மே-202021:55:50 IST Report Abuse
திராவிடன் உம்மைபோன்ற பல்லாகு தூக்கிமட்டுமே புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்,
Rate this:
Cancel
moorthi - tirupur,இந்தியா
01-மே-202019:39:50 IST Report Abuse
moorthi செல்வாக்கு ஏறிப்போச்சுனு தினமலர் மட்டும் தா சொல்லணும்
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
02-மே-202014:26:13 IST Report Abuse
எதிர்க்குரல் VERA ENNATHAAN VAZHI???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X