கொரோனாவுக்கு மாற்று சிகிச்சை வழக்கு தள்ளுபடி..!

Updated : மே 01, 2020 | Added : மே 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதற்கு பொதுவாக மலேரியாவுக்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோ குவீன் மற்றும் அசித்ரோமைசின் ஆகிய மருந்துகள் கொடுக்கப்படும். இதற்கு பதிலாக வேறுவிதமாக சிகிச்சையை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.இந்த வழக்கை பீப்பிள் ஃபார் பெட்டர் ட்ரீட்மெண்ட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதற்கு பொதுவாக மலேரியாவுக்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோ குவீன் மற்றும் அசித்ரோமைசின் ஆகிய மருந்துகள் கொடுக்கப்படும். இதற்கு பதிலாக வேறுவிதமாக சிகிச்சையை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்த வழக்கை பீப்பிள் ஃபார் பெட்டர் ட்ரீட்மெண்ட் எனப்படும் தனியார் சேவை அமைப்பு தொடர்ந்திருந்தது. ஜஸ்டீஸ் என்.வி.ரமணா, சஞ்சய் கிஷன் கவுல், பி.ஆர்.கவை ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது. வழக்கமான சிகிச்சை முறைகளைத் தவிர ஐசிஎம்ஆர் அங்கீகரிக்காத வேறுவிதமான மருந்துகளையோ, சிகிச்சை முறைகளையோ பின்பற்ற முடியாது என இந்த நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த தனியார் தொண்டு நிறுவனத் தலைவர் மருத்துவர் குனால் சஹா விளக்கம் அளித்தார்.


latest tamil news



ஹைட்ராக்ஸி குளோரோகுவீன் மற்றும் அசித்ரோமைசின் ஆகிய மருந்துகளில் பின் விளைகள் இருப்பதாகவும் இதனால் கொரோனாவால் உச்சகட்டமாக பாதிக்கப்பட்ட நபர்கள் அவதி அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சிகிச்சை முறையை மாற்ற வேண்டுமென அவர் கூறி உள்ளார். இதுகுறித்து அமெரிக்க இதய நோய் இன்ஸ்டிடியூட் ஒன்று எச்சரித்துள்ளது என்றுள்ளார். இதுவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இந்த நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுவீன் சிகிச்சைக்கு தடைகோரும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது.


latest tamil news



கொரோனாவுக்கு எந்த விதமான மாற்று சிகிச்சை வழங்கலாமென தெரியாத பட்சத்தில் எந்த சிகிச்சை வழங்குவது என மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. ஆக ஹைட்ராக்ஸி குளோரோகுவீன் சிகிச்சை அளித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே அதீத கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாற்று சிகிச்சை அளிக்க இயலாது என வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath - Chennai,இந்தியா
01-மே-202005:02:44 IST Report Abuse
Sampath மாற்று வழி உண்டென்றால் சொல்ல வேண்டும். தற்குறி கனவான்களுக்கு சரியான தீர்ப்பு. நீதி மன்றத்தின் நேரம் வீணடிக்க பட்டதற்கு இழப்பீடு தர வேண்டாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X