சரக்கு லாரிகளுக்கு '‛பாஸ்' தேவையில்லை

Added : மே 01, 2020
Share
Advertisement
புதுடில்லி:சரக்கு லாரிகள், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல, 'பாஸ்' எதுவும் தேவையில்லை என்றும், ஓட்டுனர் உரிமத்தை காட்டினாலே போதும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:முழு அடைப்பு காரணமாக, ஊர் திரும்ப முடியாமல், பல்வேறு மாநிலங்களிலும் சிக்கியுள்ள மாணவர்கள், குடிபெயர்ந்த

புதுடில்லி:சரக்கு லாரிகள், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல, 'பாஸ்' எதுவும் தேவையில்லை என்றும், ஓட்டுனர் உரிமத்தை காட்டினாலே போதும்' என, மத்திய உள்துறை அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி
இருப்பதாவது:முழு அடைப்பு காரணமாக, ஊர் திரும்ப முடியாமல், பல்வேறு மாநிலங்களிலும் சிக்கியுள்ள மாணவர்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், புனித பயணம் மேற்கொண்டவர்கள், நாளை மறுதினம், முழு அடைப்பு உத்தரவு தளர்த்தப்பட்ட பின், சொந்த ஊர்களுக்கு செல்ல, அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் சமூக இடைவெளி பேணுவது உள்ளிட்ட, சுகாதாரத்துறையின் அனைத்து
விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள், காலியாக செல்லும் லாரிகள், மாநிலம் விட்டு மாநிலம் தாண்டும்போது, அதிகாரிகள்,
'பாஸ்' எனப்படும், அனுமதி சீட்டு கேட்பதாக, புகார் கூறப்படுகிறது.

இரண்டு ஓட்டுனர்கள், ஒரு உதவியாளருடன் வரும் சரக்கு லாரிகளுக்கு, ஓட்டுனர் உரிமம் மட்டுமே போதுமானது. அனுமதி சீட்டு எதுவும் தேவையில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X