சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என தமிழக தலைமை செயலர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலாக்கப்பட்டதால், வெளி மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததை அடுத்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்கிடையே தலைமை செயலர் சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரக்கூடிய நபர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்படுவதற்கான ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்ட வேண்டும். சிறப்பு பயண பாஸ் முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE