அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்களின் நிலை என்ன?

Updated : மே 01, 2020 | Added : மே 01, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

சுரேஷ் பாபு முத்துப்பாண்டி என்ற அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர் கடந்த 24 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரது தாயார் சமீபத்தில் மறைந்துவிட்டார். இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் இந்தியா வர முடியாமல் தவித்தார். இதேபோல பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தவித்து வருகின்றனர்.latest tamil newsகடந்த மார்ச் 22 முதல் இந்தியாவில் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. USA TO INDIA EVACUATION FLIGHTS என்ற பேஸ்புக் குரூப்பை அமெரிக்க வாழ் இந்தியர்கள் 7,600 பேர் துவங்கினர். இவர்கள் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தாங்கள் அவசர தேவைகளுக்காக இந்தியா செல்ல அனுமதி கோரினர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். பல வசதியான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரைவேட் ஜெட் மூலம் இந்தியாவுக்கு வர பணம் தரத் தயாராக உள்ளனர்.இதேபோல பலர் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


latest tamil newsதற்போது அமெரிக்கா இருக்கும் நிலையில் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு செல்ல சிறப்பு அனுமதி கொடுப்பது மிகக் கடினம். அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அமெரிக்காவில் வாழும் பிற நாட்டினரும் அதே கோரிக்கையை முன்வைப்பர். உலகெங்கிலும் தங்கள் நாடுகளை விட்டு பிற நாடுகளில் வேலை செய்வோருக்கு இந்த பிரச்னை இருக்கவே செய்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீளும்வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
02-மே-202014:27:44 IST Report Abuse
Sivagiri பிரைவேட் ஜெட் நபர்கள் யார் யார் - இங்கே யாரோட பிள்ளைகள் - என்ற லிஸ்ட் டீடைல் வெளியிட்டால் கொஞ்சம் நம்ம டிபார்ட்மெண்டுகளுக்கு உதவியாக இருக்கும்.. பிரைவேட் ஜெட்டுகளை அனுமதித்து விட்டு - பின்னாலேயே ED-என்கொய்ரி அனுப்பி வைத்தால் சிறப்பு... இங்கே கொள்ளை அடித்து-அங்கே மஞ்சக்குளிக்கிறாய்ங்களோ ??
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-மே-202007:13:29 IST Report Abuse
Bhaskaran சிறப்பு அனுமதிக்கிடக்கட்டும். இன்னும் அறுபத்துநாட்கள் கழித்து வேலையிழந்து தாய்நாடு நோக்கிவரும் இரண்டுலட்சம் ஐ டீ பணியாளர்களுக்கு என்ன மாற்று திட்டம் அரசு வைத்துள்ளது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02-மே-202009:34:05 IST Report Abuse
 Muruga Vel... கேட்டு புள்ள பெத்துக்கிட்ட மாதிரி கேள்வி கேக்கறீங்களே .....
Rate this:
sri - trichy,இந்தியா
02-மே-202015:17:22 IST Report Abuse
sriஅரசாங்கத்தை கேட்டா புள்ள பெத்துக்கறோம் . அதுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு ஜாதி கார்டு கொடுக்கறீங்களா . அதுமாதிரி தான் இதும் ....
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-மே-202003:38:33 IST Report Abuse
மலரின் மகள் மனவேதனையுடன் சொல்கிறேன். நடப்பது பிடிக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறையேனும் வந்துவிட்டு சில மாதங்கள் இருந்து விட்டு திரும்புவோர் சில வாசகர்களால் கூட நீங்கள் வரவேண்டாம் என்று மலரிலேயே கூட கருத்து தெரிவிக்கிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் பூமி என்று கூறிய அதே வாசகர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமையை ஏற்காமல் இருப்பவர்கள், உழைப்பிற்கும் ஊதியத்திற்கு பலகாரணங்களால் வெளி நாடு சென்றோர் திரும்பி வந்து சில காலம் இருப்பது கூடாது என்று சொல்கிறார்கள். அவர்கள் மனம் பாற்பட்டு கிடக்கிறது என்பதை தவிர வேறொன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். யுத்த பூமியில் கூட பாதுகாப்பாக பயணிக்க சில வழிமுரைகள் இருக்கும் ஆனால் இன்று கொரோனா அச்சம் காரணமாக எந்த பாதுகாப்பு கவசங்களும் அதை பிரத்தியேகமாக மிகவும் உன்னத தரத்தில் தயாரிப்பதற்கு கூட அரசுகள் முயற்சிப்பதில்லை போல. சிறப்பான பாதுகாப்பு உடைகளை அணிந்து அனைவரும் வரலாம் அவரவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் சில வாரங்களுக்கு என்று சொல்வதற்கு கூட தயாரில்லையா? ஊரடங்கை நாம் மனமுவந்து ஏற்போம் சில மூன்று வாரங்கள் அதை கடுமையாக கடைபிடிப்போம் இதனால் வழக்கம் போல நிலைமையை மாற்றி கொள்ளலாம் என்ற எண்ணமில்லாமல் ஊரு சுற்றுவோர் பலர். மாநகராட்சிகளில் இது ஒரு சான்று போல. பொருளாதாரம் முடக்கப்படுகிறது. உணவருந்த வழியில்லாமல் தெருவோருக்கும் இருப்போருக்கு உதவி செய்வதற்கும் வழியில்லை முழு அளவில். இருக்கும் இடத்திலேயே முடங்கி இருங்கள் என்கிறார்கள். எங்கே உணவு. எங்கே மருந்துகள். எப்படி பெறுவது என்றெல்லாம் யாரும் கவலை கொள்வதாயில்லை. உள்நாட்டில் இருப்போரும் வெளிநாட்டில் இருப்போரும் தத்தம் சொந்த பந்தங்களை சந்திக்க தடை என்று தான் இன்று இருக்கிறது. தடை துவங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பும் தொடாண்டிய சில நாட்களிலும் கூட்டம் கூட்டமாக சென்றவர்களால் இன்று கொரநா பரவியாதா? அவர்களை விட அதிக பாதுகாப்பும் சொந்த வாகனங்களில் சென்று உறவுகளுடன் தாய் நாட்டில் வந்து செல்வதற்கு கூட உரிமை மறுப்பு இருக்கிறதே? காரணம் எதுவாகினும் வெளிநாட்டிற்கு சென்றது அவர்களின் குற்றம் அது அவர்கள் விதி அதை அனுபவியுங்கள் என்று சொல்வது போல இருக்கிறது இப்போதைய நிலைகள். வெளிநாட்டவர்கள் திரும்பினாள் வியாதி பரவும் உள்நாட்டில் இருப்போர்களால் பரவாது என்று புதிய சித்தாந்தம் வேறு இவர்களுக்கு. நீண்ட காலம் ஒரு நிலை நீடித்தால் அரசின் மீதும் அரசாள்வோரின் மீதும் நிச்சயம் வெறுப்பு வரும். நிச்சயமாக சொல்வோம் இன்றைய நிலைமைக்கு யார் காரணம்? இது வரையில் இயற்கையின் மீதும் யாரும் இல்லாமல் விதி இப்படி செய்கிறதே என்றும் எண்ணம் கொண்டிருந்தோர் இனி அதற்கு சிலரை காரணமாக்குவர். மனம் அப்படித்தான். அது ஒருபுறமிருக்க, ஆள்வோரின் திறமை இன்மையால் ஊரடங்கு நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று தான் நிச்சசயம் சொல்வர், எதிர் கட்சிகளுக்கு அதுவே சாதகமாக மாறும். பாதுகாப்பை உயர்த்துங்கள் அதற்குரிய நடவடிக்கையை பொற்கால வேகத்தில் எடுத்து செயல் படுங்கள். அதை விடுத்து கட்டுப்படுத்த முடியவில்லை, மக்கள் ஒத்துழைப்பு தரமறுக்கிறார்கள் என்று சொல்லி கொண்டிருக்கவேண்டாமே? பாதுகாப்பு உடைகளை அணிந்து தனியாக வாகனங்களில் செல்வோருக்கு எதற்கு தடை வேண்டும்? அடிப்படை கேள்விகள் விடை இல்லை. ஊரடங்கு இரண்டு மூன்று நாடு எங்கு அதற்கு வரிசை தரப்பட்டு விட்டதே இப்போது. ஒவ்வொரு மக்களின் மனா வேதனை கோபமாக மாறுவதறகு முன்பு எது தேவையோ அதை செய்வதை திருந்த செய்யவேண்டும். பாதிப்பு என்பது இல்லை. அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு தயார், தனிமை படுத்தி கொள்வதற்கும் தயார், விமானத்தின் செலவுகளையும் ஏற்க தயார். வேறு என்ன செய்யவேண்டும்? பணிபுரியும் இடத்தில் செய்வது உங்கள் தேசத்தில் நீங்கள் பயணிப்பதற்கு அனுமதி தந்தாள் அடுத்த சில தினங்களிலேயே எங்கள் தேசத்தில் இருந்து உங்கள் தேசத்திற்கு விமான சேவை தனியாக வழங்க தயார் என்று சொல்கிறார்கள். அதற்குத்தான் அனுமதி இல்லை. வெளிநாடுகளில் வேலை இழந்திருக்கவேண்டும், அங்கு வாழ்வதற்கு ஆதாரம் பாதித்திருக்கவேண்டும், அவர்ளின் வாழ்நிலை மிகவும் பாதித்திருக்கவேண்டும், அப்படி பட்டோரை மட்டுமே அதுவும் ஊரடங்கு தளர்த்திய பிறகே அனுமதிக்க யோசிக்கமுடியும் என்று திட்டமிடுவது சரியா? இது எங்களின் Mann Ki Baat.
Rate this:
r ganesan - kk nagar chennai,இந்தியா
03-மே-202007:10:06 IST Report Abuse
r ganesanஇந்த அணுகுமுறை வெறும் பொறாமையின் அடிப்படையில் ஏற்பட்ட ஒரு விபரீதம். வெளிநாடு வாழ் இந்தியர்ஹலால் நம் நாட்டிற்கு இரண்டு விதத்தில் லாபம், ஒன்று அவரகள் அனுப்பும் வெளிநாட்டு செலாவணி. அதோடு நம் நாட்டில் இருப்பவர்ஹளுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்ஹல் படும் துன்பம் இங்கு இருக்கின்ற நம் சொந்தங்களுக்கு தெரிவதே இல்லை. எத்துணை பேர் ஏமாந்து பண த்தையும் இழந்து இருக்கிறாரகள் என்று தெரியுமா. அவசர நேரத்தில் நாட்டுக்கு திரும்பி வர முடியாது. பெரும்பாலான வளைகுடா இந்தியர்ஹல் மித குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவரகள்...
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
05-மே-202002:58:33 IST Report Abuse
Rajeshஇருக்கும் இடத்தில இருந்து கொண்டு இன்பமாக இருக்க தெரியாதவன் எங்கு போனாலும் இன்பமாக இருக்கமுடியாது.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X