விமான பயண நேரம் குறைக்க மோடி அறிவுரைபுதுடில்லி: உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், 'பயணியர் விமானங்களின் பறக்கும் நேரம் குறைக்கப்படுவதோடு, விமான நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்தும் வகையில், இந்திய வான்வெளியை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்' என, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.