சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 48வது நாளாக, இன்றும் (மே 2) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்தியன் ஆயில் பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொத்துறையை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப 2016 ஜூன் முதல் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி தமிழகத்தில் மார்ச் 16ம் தேதி லிட்டர் பெட்ரோல் 72.28 ரூபாய்க்கும்; லிட்டர் டீசல் 65.71 ரூபாய்க்கும் விற்பனையானது.

'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான பொது மற்றும் தனியார் வாகன போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. அவசர சேவை வாகனங்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து சேவை பாதிப்பால் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. அதன்படி 48வது நாளாக இன்றும்(மே 2) லிட்டர் பெட்ரோல் விலை 72.28 ரூபாயாகவும்; டீசல் 65.71 ரூபாயாகவும் உள்ளது.