கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர்

Updated : மே 02, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (59) | |
Advertisement
புதுச்சேரி:''என் மீது,சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய, கவர்னர் கிரண் பேடி முயற்சித்து வருகிறார்,'' என, புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.அவரது பேட்டி:புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு, 1994ல் மகசேசே விருது வழங்கப்பட்டது. அப்போது, வழங்கிய பணத்தை, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். ஆனால், இன்றுவரை அந்த பணம், அந்த தொண்டு
covid 19, coronavirus, kiran bedi,கிரண் பேடி,புதுச்சேரி, அமைச்சர், மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி:''என் மீது,சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய, கவர்னர் கிரண் பேடி முயற்சித்து வருகிறார்,'' என, புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

அவரது பேட்டி:புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு, 1994ல் மகசேசே விருது வழங்கப்பட்டது. அப்போது, வழங்கிய பணத்தை, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். ஆனால், இன்றுவரை அந்த பணம், அந்த தொண்டு நிறுவனத்திற்குச் செல்லவில்லை. மிசோரமில், அவர் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தபோது, அம்மாநில மருத்துவக் கல்லுாரியில், அம்மாநில மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், தன் மகளுக்கு, எம்.பி.பி.எஸ்., 'சீட்' வாங்கினார்.


latest tamil news


அவரது மகளும், படிப்பை முடிக்காமல் விட்டு விட்டார். மிசோரம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சீட்டையும் பறித்ததுடன், மகளையும் படிக்க வைக்காமல், ஒரு மருத்துவ சீட்டையே வீணடித்து விட்டார்.கடந்த, 1993ல் சிறை அதிகாரியாக பணிபுரிந்தபோது, வெளிநாட்டினரை சிறைக்குள் அழைத்துச் சென்றார். இதனால், அவரது மேல் அதிகாரி, 'பெரிய பதவிகள் எதையும் இவருக்கு வழங்கக் கூடாது' என, பரிந்துரைத்துள்ளார்.

விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்து, சொகுசு வகுப்பில் பயணம் செய்ததற்கான டிக்கெட் பணத்தை பெற்றுக் கொண்டார்.சேவை புரிவதற்காக புதுச்சேரிக்கு வந்துள்ளதாக கூறும் கவர்னர், ஓய்வூதியமாக கிடைக்கும், 60 ஆயிரத்தை பெற்று கொள்ளாமல், கவர்னர் சம்பளம், 3.50 லட்சம் ரூபாயை பெறுவது ஏன்?

என் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முயற்சித்து வருகிறார். நான் தவறாக சம்பாதித்தால் தானே வழக்கு பதிவு செய்ய முடியும். என் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளேன்.அதுபோல், அவர் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

aroulradj - சென்னை,இந்தியா
02-மே-202019:40:31 IST Report Abuse
aroulradj கவர்னர் ஏழை மக்களுக்கு அரிசி வழங்ககூடாது என்பதில் எவ்வாறு தடையாக உள்ளார் என்பதை நாம் அறிந்ததே . ஒவ்வொரு முறையும் அரிசி வழங்கல் கோப்பில் கையெழுத்திட்டு அந்த அரிசியை ஆய்வுக்கு அனுப்பி அதை எவ்வாறு எல்லாம் காலம் தாழ்த்தி அதிலே தடையை ஏற்படுத்தியவர் .இந்த முறை corana க்கு அரிசி வழங்கியபோது ஏன் அரிசியை ஆய்வுக்கு அனுப்பவில்லை . உண்மையாகவே அரசி சாப்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என்று மக்கள் மனதில் நிலவுகிறது . இதில் இருந்து அவருடைய இரட்டை வேடம் நமக்கு புலப்படுகிறது .
Rate this:
Cancel
krishnamoorthy - chidambaram,இந்தியா
02-மே-202017:46:20 IST Report Abuse
krishnamoorthy கிரண் பேடி அவர்கள் புதுவை ஆளுனராக பதவி ஏற்க வந்த பொழுது, நானும் அவரை வாழ்த்தி ட்விட் போட்டு இருந்தேன் ஆனால் பின்னாளில் அவருடைய அதிகாரம் எல்லையை கடந்து மக்காளால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு மக்காளுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற முற்படும் போது அதற்கு முட்டுக்கட்டை போடுவது இவருக்கு வாடிக்கை ஆகிவிட்டது. நீதி மன்றங்கள் கவர்னர் மற்றும் முதல்அமைச்சர் ஆகியோருக்கான அரசியல் சாசன பிரிவுகளை எடுத்துக்காட்டிய பின்னரும் அதிகாரத்தின் மீதான ஆசை ஆட்டிபடைக்கிறது.
Rate this:
Cancel
visu - tamilnadu,இந்தியா
02-மே-202016:49:17 IST Report Abuse
visu இதில் எதுவுமே செல்லாத குற்ற சாட்டுகள் மத்திய அரசு ஊழியருக்கு அவ் தற்போது பணிபுரியும் மாநிலத்தில் கோட்டா தகுதி உண்டு அதில் சீட் பெறுகிறார். அதை பத்தியில் விட்டதற்கு என்ன காரணமோ அதர்க்கு சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் அவர் பென்ஷனும் ஊதியமும் பெற்றால் தான் தவறு ஒன்று பெறுவதில் என்ன தவறு . விருது தொகையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் அது அவருக்கு கவ்ரவ குறைச்சலே தவிர குற்றமாகாது ஊழலாகாது ஆகா மொத்தம் ஊழல் குற்றம் எதுவும் அமைச்சரால் சொல்ல முடியவில்லை போகிறபோக்கில் எதோ சேற்றை வாரி வீசுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X