பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் எப்படி? முதல்வர் இபிஎஸ் இன்று முடிவு

Updated : மே 02, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: நாளையுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கை, மேலும், இரு வாரங்களுக்கு நீட்டிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், தொற்று பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலங்களில், என்னென்ன நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., இன்று( மே - 2) அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கிறார்.தமிழகத்தில், 12 மாவட்டங்கள், சிவப்பு மண்டலமாகவும்; 24

சென்னை: நாளையுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கை, மேலும், இரு வாரங்களுக்கு நீட்டிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், தொற்று பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலங்களில், என்னென்ன நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., இன்று( மே - 2) அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கிறார்.latest tamil news


தமிழகத்தில், 12 மாவட்டங்கள், சிவப்பு மண்டலமாகவும்; 24 மாவட்டங்கள், ஆரஞ்சு மண்டலமாகவும் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும், பச்சை மண்டலத்தில் தொடர்வதாக, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில், ஊரடங்கு நீட்டிப்புக்கு பின், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுப்பதற்காக, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் தலைமையில், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.


latest tamil newsஇக்குழு, துறை வல்லுனர்கள் மற்றும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, தன் இடைக்கால அறிக்கையை, நேற்று முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், நோய் பரவல் குறைந்த மாவட்டங்களில், தொழிற்சாலைகள் துவங்க அனுமதிப்பது தொடர்பாக, முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதைத் தொடர்ந்து, இன்று காலை, 11:00 மணிக்கு, முதல்வர் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. அதன்பின்னரே, ஊரடங்கு நீட்டிப்பு காலத்தில், எந்தெந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்; தளர்த்தப்படும் என்பது பற்றிய, தமிழக அரசின் முடிவுகள் தெரிய வரும்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-மே-202012:56:03 IST Report Abuse
அசோக்ராஜ் இந்த நேரத்தில் கோவில் பணத்தில் கை வைத்து பத்து கோடி எடுத்தது குற்றம். அதுவே தண்டனை. அற(மற்ற)நிலையத்துறை தலைமையகம் சிவப்புப் பட்டியலில்.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
02-மே-202012:52:02 IST Report Abuse
Krishna DISEASE WAS IMPORTED BY IDIOTIC RULERS-OFFICIALS by Bringing Overseas Citisens from China Etc Etc. As DISEASE ALSO SPREADS BY AIR, All Isolations-Quarantines-HotSpots-GreenOrangeRed Zones, Fencing Etc Etc are Idiotic Only for Power-Misuses & Medical Terrorism. Testing with Infected or Normal Kits Give Many False Positives Even in RT-PCRs (dead DNA shreds-antibodies even from Recovered Patients Tests Positive). ONLY ALL WORLD-STRICT LOCKDOWN CAN HALT DANGEROUS SPREAD (Otherwise Disease will Remain For Long, Flaring Here & There Strict Lockdown for 15days-Most essentials to be door delivered by All Govt Staff followed by Controlled-Localised Lockdown for 15days is Sufficient Extendable if only required). Now, in India, Disease is almost Under Control due to Lockdown & Hot Climate. AGAIN DISEASE IS GOING TO FLAREUP DUE TO IDIOTIC IMPORT OF EXPATRIATE & MIGRANTS (QUARANTINE THEM IN ANDAMANS & LAKSHADWEEP)FOR IDEA STEALERS IDIOTIC & FAT RULERS-OFFICIALS.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
02-மே-202012:49:48 IST Report Abuse
S.Baliah Seer சென்னையைப் பொறுத்தவரை இந்த நிலை மேமாதம் முழுவதும் தொடருவதை தவிர வேறுவழி இல்லை.கோயம்பேட்டில் இருந்து நிறைய பேருக்கு தொற்றி இருப்பது வருத்தமான செய்தியாக உள்ளது.எந்தெந்த பகுதிகளில் கொரோனா உள்ளதோ அங்கெல்லாம் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து அந்த பகுதிகளை தனிமப் படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் ஆரவாரம் இல்லை.காய் ,கனி விநியோகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு,கூட்டம் சேராத சில கடைகள் ,சாலையோர காய்கறி கடைகள் போன்றவற்றை அனுமதிக்கலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X