பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் வட மாநில தொழிலாளர்கள் போராட்டம்

Updated : மே 02, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: சென்னையில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா பயணிகள், வெளிமாநில தொழிலாளர்கள் என பல்வேறு சிக்கியுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை
சென்னை, வட மாநில தொழிலாளர்கள், போராட்டம், கொரோனா, கொரோனாவைரஸ், போராட்டம், Chennai, Tamil Nadu, TN district, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, migrant workers, protest, home, travel ban, lockdown, lockdown extension, corona in TN

சென்னை: சென்னையில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா பயணிகள், வெளிமாநில தொழிலாளர்கள் என பல்வேறு சிக்கியுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. சென்னையில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் கிண்டி, வேளச்சேரி, முகப்பேறு பகுதியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வேளச்சேரியில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். ஒரே இடத்தில் அவர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


ஊரடங்கு காரணமாக, சென்னையில் வேளச்சேரி, பெருங்குடி, கிண்டி, முகப்பேர், கவுல் பஜார் உள்ளிட்ட பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலையில்லாமல் இருக்கும் அவர்களிடம் பணமும் இல்லை. சாப்பாடும் சரிவர வழங்குவதில்லை என தொழிலாளர்கள் சொல்கின்றனர். இதனால் பல்லாவரம் அடுத்த கவுல் பஜாரில் ஆயிரத்துக்கு அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு ரயில்களில் தங்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோஷமிட்டனர்.

latest tamil news
5 பேருக்கு கொரோனா


சென்னை அடுத்த குன்றத்தூரில் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 2 வார குழந்தை உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஈக்காட்டு தாங்கல் அம்பாள் நகரில் இறைச்சி கடை வைத்தவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


பெண் டாக்டருக்கு கொரோனா


சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவரது தாத்தா, பாட்டி ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெறும் நிலையில், அவர்கள் மூலம் கொரோனா டாக்டருக்கு பரவியது.


தூய்மை பணியாளர் பாதிப்பு


ராயப்பேட்டை, லாயின்ட்ஸ் காலணியில் உள்ள தமிழ்நாட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பணிபுரிந்த 52 வயது தூய்மை பணியாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.


கோயம்பேடு தொடர்புடைய 50 பேருக்கு கொரோனா


கோயம்பேடு சந்தை தொடர்புடைய 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேடு தொடர்பு மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.


சிஎம்டிஏ கூட்டத்தில் பங்கேற்றவருக்கு கொரோனா

கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றுவது தொடர்பாக நேற்று முன்தினம் சிஎம்டிஏ கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை சேர்ந்த நபர் பங்கேற்றார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சிஎம்டிஏ கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
02-மே-202020:27:19 IST Report Abuse
 Muruga Vel ஒவ்வொரு மாநிலங்களிலும் தொழிலாளர் நல துறை .. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இயங்குகின்றன .. எந்த ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்தில் வேலை செய்பவர்களின் பட்டியல் தொழிலாளர் நலத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் .. அதிலிருந்து அவர்களை யார் அழைத்து வந்தார்கள் என்ன வேலை யாரிடம் செய்கிறார்கள் போன்ற விவரங்கள் தெரிய வரும் .. மாதா மாதம் கப்பம் வாங்கி கொழுத்து போன தொழிலாளர் நல துறை அதிகாரிகளின் கவன குறைவே இந்த மாதிரி சம்பவங்களுக்கு காரணம் .. அந்தந்த மாநிலங்களில் தகுந்த தகுதி உள்ள தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தால் மட்டுமே வேறு மாநில ஆட்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும் ..
Rate this:
Cancel
பால சுப்பிரமணியன்  அ. பசியும், நோவும் ஜாதி சமயம் பார்த்து வருவதில்லை. மனித நேயம் பிறவியிலேயே ஆண்டவன் அருளிய குணம். மக்கள் யாவருக்கும் பங்களித்து வாழ்வதே நமது தர்மம். இந்த கஷ்டமான தருணத்தில் உழைப்பாளிகளை ஆதரிப்பது நமது கடமை.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-மே-202019:16:10 IST Report Abuse
Lion Drsekar இன்று நம்மவர்கள் மன்னிக்கவும் எல்லாமே இலவசமாக கிடைப்பதால் அனைவரும் மிராசுதார்களாகிவிட்டனர். உழைப்பவர்கள் மன்னிக்கவும், அவர்கள் இடத்தில வடஇந்தியர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள், அதிலும் மிக நேர்த்தியாக செய்கிறார்கள், நம் தமிழகம் நம்மவர்களுக்கு செய்வதை விட மிக அதிக அளவில் அவர்களுக்குத்தான் நிவாரணம் நல்ல முறையில் செய்தும் அவர்களுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X