பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா இல்லாத மாவட்டமான சிவகங்கை; கோயிலில் கலெக்டர் பிரார்த்தனை

Updated : மே 02, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
சிவகங்கை: சிவகங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதால், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது. இதனையடுத்து கோயிலுக்கு சென்ற அம்மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா
Corona Free District, Sivagangai, Collector, J Jayakanthan, coronavirus, corona, covid-19, corona outbreak, corona cases, corona updates, corona news,Tamil Nadu, TN districts, TN news, TN, Corona in TN, TN fights corona, new positive cases, corona test, corona recovery,  சிவகங்கை, கொரோனா, பாதிப்பு, இல்லாத, மாவட்டம், கலெக்டர், ஜெயகாந்தன், பிரார்த்தனை

சிவகங்கை: சிவகங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதால், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது. இதனையடுத்து கோயிலுக்கு சென்ற அம்மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக இருந்து வந்த நிலையில், வேப்பனஹள்ளி அருகேயுள்ள நல்லூரை சேர்ந்த 67 முதியவருக்கு கொரோனா உறுதியானது.
இதனையடுத்து பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி, ஆரஞ்ச் மண்டலத்திற்கு மாறியுள்ளது. அதேநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 9 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கடந்த 21 நாட்களாக அந்த மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லாததால் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.


latest tamil newsசிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 11 பேர் ஏற்கனவே குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மீதமிருந்த ஒருவரும் இன்று (மே 02) பூரண குணமடைந்ததால் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் அதிகாரிகள், இனிப்பு கொடுத்து வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஜோதி வடிவில் ஜீவ சமாதி அடைந்த மகானும், கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்பட்டு வரும் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் ஆராதனை தினம் இன்று நடைபெறுகிறது.

வருடந்தோறும் ஆராதனை விழாவிற்காக ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்று கூடி இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம், ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று பரவலால் விழா நடைபெறவில்லை. இந்நிலையில் ஆராதனை விழாவைப் பற்றியும், சதாசிவ பிரம்மேந்திராளின் அற்புதங்களையும் கேள்விப்பட்ட கலெக்டர் ஜெயகாந்தன், அவரது ஜீவ சமாதி உள்ள மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தார். மேலும் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும் வேண்டி வழிபாடு செய்தார். அவருடன் சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் வந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
02-மே-202020:44:26 IST Report Abuse
Girija மதுரை அரசு மருத்துவமனையால்அலைக்கழிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு விரட்டப்பட்ட அந்த ஏழை 3 மாத குழந்தை அறுவை சிகைச்சைக்கு தனியார் மருத்துவமனையில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் காப்பீட்டில் இருந்து இரண்டு லட்சம் நிதி ஒதுக்கி உதவி செய்தாரோ அப்போதே இவர் மனித கடவுளாக உயர்ந்து விட்டார். எம் ஜி ஆர் அன்றே சொன்னதுதான் "பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா , இன்று கொள்ளகை நிறைவேற்று தோழா" , இது போல் உதவி செய்யுமாம் பாக்கியம் சிலர்க்குதான் கிடைக்கும், அவர்களை அந்த செய்யும் இடத்தில் உட்காரவைத்து மஹாலக்ஷ்மி அதை முழு மனதுடன் செய்ய வைப்பாள். அந்த குழந்தையின் பெற்றோர்கள் இவரிடம் நேரில் செல்லவில்லை ஆனால் கலெக்டர் க்கு எப்படியோ தகவல் சென்று , மதுரையில் இருக்கும் அந்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி, சென்னைக்கு பேசி, ஒரு மணி நேரத்தில் அந்த உதவியை செய்து கொடுத்தார். அந்த குழந்தைக்கு கலெக்டர் பற்றி தெரியுமா? அல்லது கலெக்டருக்கு அந்த குடும்பம் உறவா ? அதுதான் தெய்வ சக்தி. "எனக்கு நானே", "உனக்கு நீயே", "ஓடிப்போவோம் வா" என்று வேஷம் போட்டாலும் எடுபடாது . அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதனால் உதவி கேட்பவர்கள் யோசிப்பர்.
Rate this:
Cancel
02-மே-202019:28:15 IST Report Abuse
Kothandaraman சார் மாவட்ட ஆட்சியர் நல்ல மனது அதனால தான் கொரோனா தொற்று மிக விரைவில் குணம் அடைந்து உள்ளது நல்ல மனம் படைத்தவர் உழைப்பாளி அவர் தந்தையும் அப்படித்தான் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-மே-202019:07:49 IST Report Abuse
sankaseshan சதாசிவ பிரமேந்திரர் தான் siddhi அடைந்தபோது ஒரு இஸ்லாமிய நண்பருக்காக கராச்சியில் காட்சி கொடுத்துள்ளார் அது அவர் வாழ்கை சரிதத்தில் பதிவாகியுள்ளது மேலும் புதுக்கோட்டை மன்னருக்கு மணலில் எழுதி கொடுத்த உபதேசம் மன்னரால் துணியில் எடுத்து செல்லப்பட்டு அது பாதுகாப்பாக ராஜராஜேஸ்வரி கோயிலில் ஒரு வெள்ளிப்பெட்டியில் இருக்கிறது இப்போதும் பார்க்கலாம் அக்பர் இதை தெரிந்து கொள்ளட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X