கான்கிரீட் கலவை வாகனத்தில் பதுங்கி பயணித்த 18 பேர்

Updated : மே 02, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (16) | |
Advertisement
போபால்: கான்கிரீட் கலவை வாகனத்தில் பதுங்கி, மஹாராஷ்டிராவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல முயன்ற 18 பேரை மத்திய பிரதேச போலீசார் மடக்கி பிடித்தனர்.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளிமாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதற்கிடையே, வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த
Migrant Workers, Concrete Mixer, Returning Home, UP, Indore, Bhopal, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, van, truck, travel ban, lockdown, lockdown extension, curfew, hometown, Madhya Pradesh, MP, Maharashtra, DSP Umakant Chaudhary, MHA,  கான்கிரீட், கலவை, இயந்திரம், வாகனம், பதுங்கல், தொழிலாளர்கள்,

போபால்: கான்கிரீட் கலவை வாகனத்தில் பதுங்கி, மஹாராஷ்டிராவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல முயன்ற 18 பேரை மத்திய பிரதேச போலீசார் மடக்கி பிடித்தனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளிமாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதற்கிடையே, வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, மாநில அரசுகளின் முயற்சியில் ரயில்களில் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இருந்து உ.பி., மாநிலம் லக்னோவுக்கு செல்ல முயன்ற 18 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.latest tamil newsகட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தை மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கலவை இயந்திரத்தின் உள்ளே 18 பேர் பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ந்தனர். இதனால், 18 பேரையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர்களை சட்ட விரோதமாக அழைத்து வந்த வாகனத்தின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-மே-202023:23:31 IST Report Abuse
தமிழவேல் வெளிநாட்டுக்கு தனிவிமானம் அனுப்பி கொண்டுவந்து சேர்ந்தாற்போல, இந்த ஏழை தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் ஒரு வழியை செய்திருந்தால் ஏன் இந்த கஷ்டப்பட்டு ஏமாற்றப் போகின்றார்கள் ?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-மே-202018:55:36 IST Report Abuse
Lion Drsekar "சட்ட விரோதமாக அழைத்து வந்த வாகனத்தின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்." சட்ட விரோதம் என்பது அவரர்கள் பிரிவை சார்ந்தது, இந்த சட்டம் எல்லோருக்கும் பொருந்தாது, இது ஒரு புறம் இருக்கட்டும், மத்திய அரசு இயந்திரம் மற்றும் மாநில அரசு இயந்திரங்கள் இயக்கிவரும் இரயில் மற்றும் பேருந்துகளில் சட்டப்படி எத்தினை பேர் பயணிக்கலாம்? ஆனால் எத்தினை பேர் பயணிக்கிறார்கள் அப்போது நடைமுறை ?? பொருளாதார கணக்கு போடவில்லை, இதனை பேர் பயணிக்கும் வாகனத்தில் பல மடங்கு பணிப்பவர்களிடம் இருந்து டிக்கெட் பணம் வசூலித்தாலும் நட்டத்தில் இயங்குகிறது என்றால் என்ற கணக்குக்கு வரவில்லை, தேர்தல் என்று வந்தாலும், வெற்றி பெற்றாலும், சரக்கு வாகனங்களில் ஏற்றப்படும் மக்களின் தொகை கணக்கிட முடியாது? அதில் வேடிக்கை கைது செய்ய துறை அவர்களுக்கு பாதுகாப்புக்கு செல்வது?? இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம், முடிவு நம் நேரம்தான் வீண், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
02-மே-202018:34:43 IST Report Abuse
Chandramoulli Tamil Tamil enru solli tamilakathil uruppadamal seithu ullanar . Ithil oursilar suthathirathai alavukku meeri ,kadunaiyaana vaarthaikalaal arasai kurai solla entha thahuthiyum illai. Tamilarneethi peyaril oru kaatumiraandi ullathu ingu.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X