புதிய பார்லி., கட்டடத்தால் இந்திரா நினைவிடத்திற்கு பிரச்னை?

Updated : மே 03, 2020 | Added : மே 03, 2020 | கருத்துகள் (73) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவலால் எதிர்க்கட்சியினர் அதிகமாக அரசியல் செய்ய முடியாத நிலை. 'இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்' என, ராகுல் சொல்லி வந்தாலும், அவர், தினமும், பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார்.இந்நிலையில், விரைவில் எதிர்க்கட்சியினர், குறிப்பாக காங்., கட்சியினர், ஒரு பெரும் பிரச்னையை எழுப்ப வாய்ப்புள்ளது
Indira,Indira Gandhi, Memorial, Delhi, new parliament building, centre, govt of india, central govt, coronavirus, corona, covid-19, corona outbreak, lockdown, congress, politics, rahul gandhi, bjp, priyanka gandhi,  இந்திரா,நினைவிடம்

புதுடில்லி: கொரோனா பரவலால் எதிர்க்கட்சியினர் அதிகமாக அரசியல் செய்ய முடியாத நிலை. 'இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்' என, ராகுல் சொல்லி வந்தாலும், அவர், தினமும், பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், விரைவில் எதிர்க்கட்சியினர், குறிப்பாக காங்., கட்சியினர், ஒரு பெரும் பிரச்னையை எழுப்ப வாய்ப்புள்ளது என்கின்றனர் சீனியர் அதிகாரிகள். புதிய பார்லி., வளாகம் கட்ட, மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த வளாகத்தில், பார்லிமென்ட், மத்திய அரசு அலுலவகங்கள் என, அனைத்தும் இருக்கும். இந்தத் திட்டம், 20 ஆயிரம் கோடி ரூபாயில், நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என, சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.


latest tamil newsஇதற்கிடையே, டில்லியில், சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, முன்னாள் பிரதமர் இந்திராவின் வீடு, இப்போது நினைவகமாக உள்ளது. அதில், அவர் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்கள் உள்ளன. 'மிகப்பெரிய நிலப்பரப்பில் இருக்கும் இந்த நினைகத்திற்கு, இவ்வளவு இடம் தேவையில்லை; அவசியமான இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதி இடத்தை, புதிய பார்லி., வளாகத்திற்கு விட்டுத் தர வேண்டும்' என, அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சியினர் தரப்பில் இருந்து பிரச்னை வரும் என சொல்லப்படுகிறது.


latest tamil news


'நினைவகத்தில் கை வைக்கவில்லை; தேவைக்கும் அதிகமாக இருக்கும் இடத்தை தான் எடுத்துக் கொள்ளப் போகிறோம்' என, அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நினைவகத்தில் இருந்த, இந்திரா பயன்படுத்திய பல பொருட்களை, அவருடைய பேத்தி, பிரியங்கா ஏற்கனவே எடுத்துச் சென்றுவிட்டார்; அங்கு இருப்பது, 'டூப்ளிகேட்' பொருட்கள் எனவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும், இந்த விஷயம் பெரும் எதிர்ப்பை கிளப்பும் என்பது மட்டும் நிச்சயம்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
03-மே-202016:35:34 IST Report Abuse
Murthy இவ்வளவு பணம் வைத்திருக்கும் அரசு, பின்பெதற்கு மக்களிடம் பணம் பிடுங்குகிறது?
Rate this:
Cancel
03-மே-202015:56:54 IST Report Abuse
நக்கல் ஈவேரா, இந்திரா, நேரு, முக, லெனின், ஸ்டாலின், பாபர், அவுரங்கஸிப் போன்ற தேவையில்லாத தலைவர்களை கொண்டாடுவதை இந்தியா நிறுத்தவேண்டும்...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-மே-202023:12:27 IST Report Abuse
தமிழவேல் கரெக்ட், இதையெல்லாம் நிறுத்திவிட்டு கோட்ஸேவை மட்டும் கொண்டாடலாம்.....
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-மே-202013:40:43 IST Report Abuse
ஆரூர் ரங் பெண் ஹிட்லர் மனித குலத்துக்கு வேண்டாதவர். அழிவு சக்தி. இதெல்லாம் திமுகவின் இந்திரா காந்தி பற்றிய வர்ணனை
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-மே-202013:54:50 IST Report Abuse
dandyசர்க்காரியா விசாரணை தொடங்கியதும் இந்திரா பெரோஸ் கான் காலில் விழுந்தவன் CORONA கட்டுமரம் ஹி ஹி ஹி இதற்கு பெயர் ராஜதந்திரம் ...அன்றே இவனை சிறைக்கு அனுப்பி இருந்தால் டாஸ்மாக் நாட்டின் சரித்திரம் மாறி இருக்கும்...
Rate this:
Rajas - chennai,இந்தியா
03-மே-202014:03:53 IST Report Abuse
Rajasபின்னர் அதே திமுகவினர் தானே அவரை புகழ்ந்தார்கள். அரசியலில் இது எல்லாம் சகஜம்....
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-மே-202015:30:07 IST Report Abuse
dandyடெல்லி அரசியல் வியாதிகளின் காலில் புகைப்பட காரர்களை அனுப்பி விட்டு பல முறை காலில் விழுந்தவன் CORONA கட்டுமரம் .......
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
04-மே-202012:26:45 IST Report Abuse
Raman Muthuswamyபுதிய சரித்திரம் எழுத வேண்டும் .. அதாவது காந்திஜி அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு குட்பை சொல்லிவிட்டு இந்தியா கால் பதித்தது முதல்கொண்டு :: காந்திஜி நேரு படேல்இந்த மூவருக்குமான அடிக்கடிசண்டை .. நேரு "ப்ளூ-eyed boy என்பதினால் புறக்கணிக்கப் படுகிறார் .. அவமானம் உற்று குஜராத் சென்று விடுவார் இந்து-முஸ்லீம் கலவரங்கள் .. இந்தியா-பாகிஸ்தானுக்கு சண்டை-சச்சச்சரவுகள், காஷ்மீர் பிரச்னைகள் எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் நேரு தான் நேதாஜி போஸை ஆட்சி பீடத்தின் அருகாமையில் நெருங்க விடமால் தடுத்ததும் .. அவரது இறப்பின் ரகசியங்கள் யாவையும் மறைத்தது நேருவும் அவரது காங்கிரசும் தான் .. "குடும்ப அரசியலுக்கு" வித்திட்டு இந்தியாவுக்கு பெரிய துரோகம் செய்து .. அதை மறைக்க இந்திரா பங்களா தேஷ்ஐ உருவாக்கினார் .. நாட்டு எவ்வளவு சீக்கிரம் நேரு வம்சத்தினரை மறக்கின்றார்களோ அப்போது தான் இந்தியாவுக்கு சுபிக்ஷம் .....
Rate this:
selva - Chennai,இந்தியா
04-மே-202018:41:11 IST Report Abuse
selvaமுடியல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X