லண்டன் : பிரிட்டனில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களது எண்ணிக்கை 35 லட்சத்தை தொடும் இந்த சமயத்தில் இரண்டு லட்சத்து 39 ஆயிரம் பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்., 29ம் தேதி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது உலகத் தலைவர்களிடமிருந்து போரிஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தற்போது கேம்ரிட்ஜ் இளவரசர் போரிஸுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கும் அவரது மனைவி கேரி சைமண்ட்ஸுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு வில்ஃப்ரெட் என்று பெயர் சூட்டிய அவர்கள் குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வில்ஃப்ரட் லாரி நிக்கோலஸ் ஜான்ஸன் என்ற முழுப்பெயர் கொண்ட இந்த குழந்தையின் பெயரில் அதன் பெற்றோர்கள் இருவரது மூதாதயர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இவ்வளவு நீண்ட பெயர் கொண்ட இந்த குழந்தையைக் கண்டு மருத்துவர்கள் வியந்தனர். தற்போது வில்ஃப்ரட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்ஸன் முன்னதாக வெஸ்ட் மினிஸ்டர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் வில்ஃப்ரடின் வருகை அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மத்திய லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தை தற்போது போரிஸ் ஜான்ஸன் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டது. தன் தந்தை போரிஸ் போலவே நீளமான இளமஞ்சள் முடிகொண்டுள்ளான் வில்ஃரட். ஏப்., 29 ம் தேதி காலை 9 மணிக்குப் பிறந்த இந்த குழந்தையைக் காண போரிஸுக்கு கொரோனா சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய நிக் பிரைஸ், நிக் ஹார்ட் ஆகிய மருத்துவர்கள் வந்தனர். என் இதயம் நிரம்பி விட்டது. என்.ஹெச்.எஸ் மருத்துவர் குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி என போரிஸ் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறந்து 4 நாட்கள் ஆன நிலையில் போரிஸ் ஜான்ஸனுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் வில்லியம், இளவரசி கேட் உள்ளிட்டவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்த சமயத்தில் பிரிட்டனில் சட்டப்படி பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உடன் இருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE