புதுடில்லி: வட மாநிலங்களில் ராகுலை பப்பு என, கிண்டல் செய்கின்றனர். இந்நிலையிலிருந்து மாறி, ஒரு தலைவர் அந்தஸ்தை அடைய வேண்டும் என, ராகுலுக்கு நெருக்கமான தலைவர்கள் விரும்புகின்றனர்.
அடுத்த பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், ராகுலின், 'இமேஜ்' மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் என, விரும்பும் காங்., தலைவர்கள், இதற்கான வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். இதையடுத்து, தன் அப்பா ராஜிவ் போலவே தன், 'ஹேர் ஸ்டைலை' மாற்றிக் கொண்டுள்ளார் ராகுல்.

சமீபத்தில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாடினார் ராகுல். கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் மீள என்ன வழி என்பது உள்ளிட்ட, பல விஷயங்கள் அடங்கிய இந்த உரையாடல், காங்., கட்சியால் மீடியாக்களுக்கு தரப்பட்டது. இது, 30 நிமிட உரையாடல்.
ஆனால், 'இது, எடிட் செய்யப்பட்டது; உரையாடல் நடந்தது, 90 நிமிடங்களுக்கு; ராகுல் உளறியதையெல்லாம் வெட்டி விட்டனர்' என, சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. அந்த உரையாடலில் ரகுராம் ராஜன் பேசும் போது, அவருக்குப் பின்னால் சுவரில் கடிகாரம் இருந்தது. ராகுல் பேச்சை எடிட் செய்ததை அந்த கடிகாரம் காட்டிக் கொடுத்துவிட்டது.

'எதைச் செய்தாலும் ராகுலுக்கு எதிராகவே போகிறதே... அவருடைய நேரம் சரியில்லை' என நொந்து போயுள்ளனர் காங்கிரசார். இந்த உரையாடல் எடிட் செய்யப்பட்டிருந்தாலும், ராகுல் நன்றாகவே பேசியுள்ளார் என்கின்றனர் நடுநிலைவிமர்சகர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE