பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாபேடு ஆன கோயம்பேடு: 146 பேருக்கு கொரோனா

Updated : மே 03, 2020 | Added : மே 03, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: இன்று 38 பேருக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலருக்கு கொரோனா பரவியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வந்த 3
கோயம்பேடு, கொரோனா, அரியலூர், கடலூர், விழுப்புரம், சென்னை, கொரோனாவைரஸ், coronavirus, Coronavirus pandemic, covid 19, corona, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in tn, corona in tail nadu, covid 19 in tamil nadu,

சென்னை: இன்று 38 பேருக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலருக்கு கொரோனா பரவியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வந்த 3 பேருக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




கோயம்பேடு சந்தை சென்று வந்த சென்னை அசோக் நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதியானது.

கடலூரில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு மூலம் அங்கு 17 பேருக்கு கொரோனா உறுதியானது.

அதேபோல், அரியலூரில் மேலும் இரண்டு தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு மூலம் அரியலூரில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பெரியாகுறிச்சி மற்றும் நத்தாகுழி பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியானது.

இதன் மூலம் கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் 62, கடலூரில் 17, அரியலூரில் 22, காஞ்சிபுரத்தில் 7 விழுப்புரத்தில் 38, பெரம்பலூரில் ஒருவர் என 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


குன்னூரில் 7 பேர் அனுமதி


குன்னூர் மாவட்டத்தில் இருந்து 130 பேர் காய்கறிகளை ஏற்றி கொண்டு சென்னை கோயம்பேடு சென்றனர். அங்கு பல இடங்களுக்கு சென்று விட்டு 31 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற 7 பேர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
03-மே-202020:44:58 IST Report Abuse
Tamilnesan தப்பிலிகள் ஆட்டத்தை எப்போது நிறுத்தப்போகிறார்கள்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-மே-202020:43:21 IST Report Abuse
Tamilnesan சென்னையிலே மிக மிக சுகாதாரமற்ற ஒரு இடம் உண்டென்றால் அது கோயம்பேடு மார்க்கெட் தான். படித்தவன் சூதும், வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான், இது மஹாகவி பாரதியின் வாக்கு. மக்கள் உயிருடன் விளையாடும் அரசியல்வியாதிகள், விரைவில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள்.
Rate this:
Cancel
03-மே-202018:05:33 IST Report Abuse
ருத்ரா தெரிந்தே கூட்டம் கூடுவார்கள். குப்பைகளின் நடுவே ஆட்டம் போடுவார்கள். இதற்கிடையே ஒன்றிணைவோம் வாரீர் கூச்சல் இடுவார்கள். நம்மை நாம் தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். சில அரசியல் வாதிகளே தனித் தனி தீவாய் செயல் படுவதால், கொரோனாவின் வண்ணம் அபாயத்தை தொடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X