பாதுகாப்பு உடை அணியாத சீன விஞ்ஞானிகள்; மீண்டும் கிளம்பும் வூஹான் சர்ச்சை

Updated : மே 03, 2020 | Added : மே 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Photos, Scientists, Little Protection, Bat Samples, Chinese, US, Chinese scientists, protective clothing, பாதுகாப்பு உடை, சீன விஞ்ஞானிகள், வூஹான், சர்ச்சை

வூஹான்: சீனாவின் வூஹான் வைராலஜி லேப்பில் இருந்து விஞ்ஞானிகளின் அஜாக்கிரதை காரணமாக கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் வூஹான் வைராலஜி லேப் விஞ்ஞானிகள் சரியான பாதுகாப்பு மாஸ்க், உடைகள் அணியாமல் பணி செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்கள் அந்த லேப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து கடந்த மாதம் டெலீட் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் சீனா கொரோனாவை திட்டமிட்டு உலகுக்குப் பரப்பியதை மறைக்கிறது என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


latest tamil news


வூஹான் அருகே உள்ள வெளவால்கள் குடியிருக்கும் குகைகளுக்குச் சென்று சீன வைராலஜி விஞ்ஞானிகள் சாம்பிள்களைத் திரட்ட முற்பட்டனர். இந்த புகைப்படங்கள் வூஹான் லேப் தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் அவர்கள் பாதுகாப்பு உடைகள், முகக் கவசங்கள் அணியாமல் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், 2018ம் ஆண்டு பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரக விஞ்ஞானி ரிக் ஸ்விட்சர் வூஹான் வைராலஜி லேப்புக்கு வருகை தந்தார். அந்த புகைப்படங்களும் அழிக்கப்பட்டுள்ளன.


latest tamil news


கொரோனா இயல்பாகப் பரவியது என்றால், சீனா மீது எந்த தவறும் இல்லை எனும் பட்சத்தில் எதற்காக இவ்வாறு இணைய புகைப்படங்களை அழிக்க வேண்டும்? இதிலிருந்தே சீனா உலகத்திடம் இருந்து ஏதோ ஒன்றை மறைக்கப் பார்க்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. அரசுமுறைப் பயணமாக 2018ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி ஸ்விட்சர் வூஹான் வைராலஜி லேப்புக்கு சென்றபோது அமெரிக்க மாநிலத் துறைக்கு ஓர் செய்தி அனுப்பி இருந்தார். அதன்படி, வூஹான் லேப்பில் இன்னும் பயிற்சி பெற்ற வைரலாஜி விஞ்ஞானிகள் தேவை. அங்கு வைரஸ் பரவாமல் தடுக்க, பாதுகாப்பு உபகரணங்கள், உடைகளுக்குத் தேவை உள்ளது என்று கூறி இருந்தார்.


latest tamil news


கடந்த மாதம் 'தி மெய்ல் ஆன் சண்டே' பத்திரிகை வூஹான் லேப்பில் 1500 வைரஸ் மாதிரிகள் வைக்கப்பட்டு இருந்த ரெப்ரிஜிரேட்டரின் கதவு சரியாக சீல் வைத்து மூடப்படாமல் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த விஞ்ஞானிகளின் புகைப்படங்கள் சர்ச்சைக்கு வலு சேர்த்துள்ளதை மறுக்க முடியாது. அமெரிக்க உளவுத்துறை இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளின் அஜாக்கிரதை காரணமாகப் பரவியதா அல்லது மிருகங்கள் மூலம் பரவியதா எனக் கூற மறுத்துவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
03-மே-202017:57:55 IST Report Abuse
Somiah M காட்டில் வாழும் புலியை வீட்டில் வாழும் பசுவாக நினைத்து நடத்தியது யாருடைய குற்றம் அல்லது தவறு ?
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அப்பிடி தான் பரப்புவோம் ... பலருக்கு காசு தான் சொர்க்கம். அதனால் சீனா கூட சொர்கமாக தெரியும். அந்த சொர்க்கத்தில் நரகத்துக்கும் அதிகமாக தண்டனைக்கருவிகள் செய்யப்படுவது ஏன் என்று தெரியாது? உலக நாடுகள் கவணிக்கத்தவறிய ஒரு பழைய வட கொரியா இந்த சீனா. அவர்களை ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் அமர வைத்த பெருமை நம்ம ராவுல் வின்சியின் அன்னை மைனா, கட்டுமரத்தின் மணிமேகலையையும் அப்போது இந்தியாவை ஆண்ட பொம்மை பிரதமர் திரு மன்மோகன் சிங்கையும் சேரும். காங்கிரஸ் இந்தியாவுக்கு செய்த்த 'நல்ல' காரியங்களில் இதுவும் ஒன்று.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
03-மே-202014:26:17 IST Report Abuse
blocked user வைரஸ்களுடன் விளையாடுவது பேராபத்து என்று கூட உணரமுடியாதவர்கள் எப்படி வைரஸ்களைப்பற்றி ஆய்வு செய்ய முடியும். விஞ்ஞானம் சீனர்களிடம் படாதபாடு படப்போகிறது. இது இரண்டாவது முறை - SARS ஐ முதலில் பரப்பி உலகையே அஞ்சி நடுங்க வைத்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இதை முதலில் உணர்ந்து சொன்ன மருத்துவரை நையப்புடைத்து சாகடித்து விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X