பொது செய்தி

இந்தியா

வங்கியில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள் அறிவிப்பு

Updated : மே 03, 2020 | Added : மே 03, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Bank, With drawal, Money, New Rule, lockdown, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona cases, corona news, bank association, வங்கி, பேங்க், பணம், விதிமுறை, வங்கிகள் கூட்டமைப்பு

புதுடில்லி: வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக புதிய விதிமுறைகளை வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கினை மே 17 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், பாதிப்பு மண்டலங்களின் வாரியாக சில தளர்வுகளையும் தெரிவித்திருந்தது. அதன்படி, தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குறைந்த பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கிக்கொண்டிருந்த வங்கிகள், நாளை (மே 04) முதல் 50 சதவீத பணியாளர்களுடன் மீண்டும் வழக்கமான நேரத்தில் செயல்பட இருக்கிறது. சுழற்சி முறையில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் செயல்படுவார்கள் எனவும் கொரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள வங்கி கிளைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக புதிய விதிமுறைகளை வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, தங்கள் வங்கிக் கணக்கில் பூஜ்யம் அல்லது 1 ஆகிய எண்களை கடைசி எண்ணாக வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மே 4ஆம் தேதி பணம் எடுக்கலாம். இதேபோல் கடைசி எண் 2 அல்லது 3 வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மே 5ம் தேதியும், 4 அல்லது 5 எண் கடைசி எண்ணாக கொண்ட வாடிக்கையாளர்கள் மே 6ம் தேதியும் பணம் எடுக்கலாம். இதேபோன்று கடைசி எண் 6 அல்லது 7 கொண்டோர் மே 8ம் தேதியும், 8 அல்லது 9 கொண்டவர்கள் 11ஆம் தேதியும் பணம் பெறமுடியும். இந்த கட்டுப்பாடுகள் மே 11 வரை அமலில் இருக்கும். மே 11க்குப் பின்னர் எந்த வாடிக்கையாளரும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-மே-202016:33:09 IST Report Abuse
Endrum Indian இதை நான் கருத்து பகுதியில் அப்படியே சொன்னேன் 6 நாட்களுக்கு முன் கார் எண்களுக்காக அதை அப்படியே follow செய்கின்றார்கள். பேஷ் பேஷ்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
03-மே-202021:56:42 IST Report Abuse
S. Narayanan படிக்காதவர்கள்ளுக்கு இந்த விதி முறை எல்லாம் தெரியாது. அவர்கள் பத்து பேரிடம் பேசி நூறு பேரிடம் கொரோனவ கொடுத்து விட்டு போவான். யாரோட சூப்பர் ஐடியா இது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-மே-202020:14:19 IST Report Abuse
Bhaskaran மாத ஆரம்பத்தில் நம் செலவுக்கு பணம் எடுக்க இவர்கள் நிபந்தனை போடுவது என்ன நியாயம் அப்பா
Rate this:
gopal - chennai,இந்தியா
03-மே-202020:38:39 IST Report Abuse
gopalநீங்கள் ATM மூலமாக பணம் எடுக்கலாம் . எந்த தடையும் இல்லை. சும்மா குத்தம் சொல்வதை நிறுத்துங்க ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X