ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையில்லை: தாயகம் திரும்ப 1.50 லட்சம் இந்தியர்கள் பதிவு

Updated : மே 03, 2020 | Added : மே 03, 2020 | கருத்துகள் (13)
Advertisement
துபாய்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள லட்சக்கணக்காண இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்கள் தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தின் உதவியை நாடி வருகின்றனர். இதையடுத்து கடந்த வாரம் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஐக்கிய அரபு அமீரகத்தில்

துபாய்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள லட்சக்கணக்காண இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்கள் தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தின் உதவியை நாடி வருகின்றனர்.latest tamil news
இதையடுத்து கடந்த வாரம் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பினால் துபாயில் உள்ள துணைத்தூதரகம் மூலம் தங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்காக தூதரகம் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, www.indianembassyuae.gov.in அல்லது www.cgidubai.gov.in மற்றும் www.cgidubai.gov.in/covid_register என்ற இணையதளத்தில் இந்தியர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யலாம்' எனத் தெரிவித்திருந்தது.இந்திய தூதரகத்தின் இந்த இணையதளத்தில், கடந்த மாதம் 29ம் தேதி முதல், நேற்று (2ம் தேதி) மாலை வரை, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.


latest tamil news
துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடகப்பிரிவு அதிகாரி நீரஜ் அகர்வால் கூறுகையில் 'தாயகம் திரும்ப 1.50 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 25 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர். 40 சதவீதம் பேர் கட்டிட வேலை, தூய்மை பணி உள்ளிட்ட சாதாரண பணியைச் செய்பவர்கள். இதுவரை வந்த விண்ணப்பங்களில், 55 சதவீதம் கேரள மாநிலத்தவர்களுடையது. தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்யும் போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-மே-202000:59:10 IST Report Abuse
Ramesh R இதுவரை வந்த விண்ணப்பங்களில், 55 சதவீதம் கேரள மாநிலத்தவர்களுடையது
Rate this:
Cancel
03-மே-202021:49:50 IST Report Abuse
kulandhai Kannan இந்தியாவில் மதத் தீவிரவாதம் ஆரம்பித்ததே இங்கிருந்து வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு சிங்கிள் சோர்ஸ்கள் செல்ல ஆரம்பித்ததில் இருந்துதான். இதோடு அது முடிவுக்கு வந்தால் அது ஒரு வகையில் நல்லதுதான்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
03-மே-202021:37:10 IST Report Abuse
S. Narayanan இந்தியாவை நினைத்து என்ன செய்ய போகிறோம். மிகவும் பயமாக இருக்கிறது. அரசு துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அனைவரையும் காப்பாற்ற முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X