மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கையால் தப்பித்தோம்: கெஜ்ரிவால்

Updated : மே 03, 2020 | Added : மே 03, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு மார்ச் 24ல் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், இப்போது நாட்டின் நிலைமை பயங்கரமாக இருந்திருக்கும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 24ம் தேதி, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போது அந்த முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்காமல் இருந்திருந்தால், இப்போது நாட்டின்
Delhi,Chief Minister,Arvind Kejriwal, Aam Aadmi Party, Kejriwal, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona cases, corona news, delhi cm, lockdown , lockdown extension, AAP govt, india, ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

புதுடில்லி: மத்திய அரசு மார்ச் 24ல் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், இப்போது நாட்டின் நிலைமை பயங்கரமாக இருந்திருக்கும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 24ம் தேதி, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போது அந்த முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்காமல் இருந்திருந்தால், இப்போது நாட்டின் நிலைமை படுபயங்கரமாக இருந்து இருக்கும். அப்போது நாடு கொரோனா வைரசை எதிர்க்க தயார நிலையில் இல்லை. சமூக விலகல் குறித்து நாம் யாரும் அறிந்திருக்கவில்லை. போதுமான மருத்துவ உபகரணங்களும், சோதனை கருவிகளும் அப்போது இல்லை. மருத்துவமனைகளும் தயாராகாமல் இருந்தது.


latest tamil news
டில்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கில், திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் அனுமதியில்லை. இறுதி சடங்குகளில் பங்கேற்க 20 பேருக்கு மேல் அனுமதியில்லை. டில்லி அரசால் ஊரடங்கை நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது. கடந்த ஆண்டு ஏப்., மாதத்தில் மாநில வருவாய் ரூ. 3500 கோடியாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு ரூ.300 கோடியாக குறைந்துள்ளது. இப்படி இருந்தால் அரசு எவ்வாறு செயல்படும்? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பால சுப்ரமணியன் அ திரு கேஜ்ரிவால் நன்கு படித்தவர் உண்மை நிலையை அறிந்து பிரதமர். மோடி அரசை பாராட்டுகிறார்.
Rate this:
Cancel
03-மே-202022:43:54 IST Report Abuse
பேசும் தமிழன் அப்படியே உங்கள் கூட்டாளி பப்பு கான் மற்றும் சுடலை கான் அவர்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
03-மே-202022:24:33 IST Report Abuse
Subburamu Krishnaswamy Corona virus cultured at Delhi had been successfully seeded to other states. So he is a lucky CM now
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X