கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் மசூதிகள், பள்ளிகள் திறக்க ஈரான் திட்டம்

Updated : மே 03, 2020 | Added : மே 03, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
துபாய்: ஈரானில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பாதிப்பு குறைந்த பகுதிகளில் மசூதிகள் மற்றும் பள்ளிகளை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. இங்கு இதுவரை 97,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,203 பேர் உயிரிழந்துள்ளனர். 78,422 பேர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில் ஈரானில் கொரோனாவின் பரவல் சில

துபாய்: ஈரானில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பாதிப்பு குறைந்த பகுதிகளில் மசூதிகள் மற்றும் பள்ளிகளை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.



latest tamil news



கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. இங்கு இதுவரை 97,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,203 பேர் உயிரிழந்துள்ளனர். 78,422 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஈரானில் கொரோனாவின் பரவல் சில நாட்களாக குறைந்து வருகிறது. முதலில் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு நாள் பாதிப்பு ஆயிரத்திற்குள் உள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டில் 976 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை பொறுத்து ஈரான் வெள்ளை, மஞ்சள், மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இதையடுத்து அந்நாட்டு அதிபர் ஹஸான் ரவுகானி, 'கொரோனா அதிகம் பாதிக்காத 132 வெள்ளை மண்டலங்களில் மசூதிகள் மற்றும் பள்ளிகள் மே 16ம் தேதிக்கு பிறகு திறக்கப்படும் திட்டம் உள்ளது. இருப்பினும் கொரோனா பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' இவ்வாறு அவர் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202010:26:18 IST Report Abuse
நக்கல் அமெரிக்கா ஈரானை தாக்கலாம்னு நினைத்தான், சீனாக்காரன் எல்லாரையும் தாக்கிட்டான்... சனாதன தர்மத்தை தவிர மீதி எல்லாம் அடுத்தவன் குடிய கெடுக்கத்தான் இருக்கு... அதில் முதலில் இருப்பது கம்மிகள்...
Rate this:
Cancel
Sanjay - Chennai,இந்தியா
04-மே-202008:47:37 IST Report Abuse
Sanjay இந்த வருடம் கஞ்சி குடிக்க சுடலை உங்க நாட்டுக்கு தான் வருவார்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
04-மே-202005:08:25 IST Report Abuse
blocked user விடமாட்டார்கள் போல...
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
04-மே-202005:57:58 IST Report Abuse
Anbuகொரோனாவும் விடாது ..............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X