ஐ.எப்.எஸ்.சி., தலைமையகத்தை குஜராத்திற்கு மாற்ற எதிர்ப்பு| Dinamalar

ஐ.எப்.எஸ்.சி., தலைமையகத்தை குஜராத்திற்கு மாற்ற எதிர்ப்பு

Updated : மே 03, 2020 | Added : மே 03, 2020 | கருத்துகள் (12) | |
மும்பை: சர்வதேச நிதி சேவை மையகத்தின் தலைமையகத்தை குஜராத்திற்கு மாற்ற மத்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கு தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஐ.எப்.எஸ்.சி., எனப்படும் சர்வதேச நிதி சேவை மையத்தின் தலைமை அலுவலகத்தை மஹாராஷ்டிராவில் தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் தலைநகர் காந்திநகருக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு கடந்த ஏப். 27-ல்
 "Erroneous And Unwarranted": Sharad Pawar Slams Shifting Of Finance Body IFSC's Office To Gujarat

மும்பை: சர்வதேச நிதி சேவை மையகத்தின் தலைமையகத்தை குஜராத்திற்கு மாற்ற மத்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கு தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஐ.எப்.எஸ்.சி., எனப்படும் சர்வதேச நிதி சேவை மையத்தின் தலைமை அலுவலகத்தை மஹாராஷ்டிராவில் தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் தலைநகர் காந்திநகருக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு கடந்த ஏப். 27-ல் அரசிதழிலில் வெளியிட்டது. இதற்கு மஹாராஷ்டிரா ஆளும் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்தன.மத்திய அரசின் முடிவுக்கு தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


latest tamil news
இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது:குஜராத்தில் ஐ.எப்.எஸ்.சி., தலைமையகம் நிறுவ மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிக மோசமானது, தவறானது மற்றும் தேவையற்றது. சர்வதேச நிதி சேவை மையத்தில் மற்ற மாநிலங்களைவிட மஹராஷ்டிரா அரசின் பங்களிப்பு தான் மிகவும் அதிகமான ஒன்று. சர்வதேச அளவில் மும்பை வர்த்தக நகரம் என்பதால் ஐ.எப்.எஸ்.சி., தலைமையகம் மும்பையில் இருப்பது தான் நல்லது.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையாக கருதி பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வழி செய்ய வேண்டும் என்றார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X