இருநாட்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு; கொரிய எல்லையில் பதற்றம்!

Updated : மே 04, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன், தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், கொரிய எல்லையில், இருநாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.கடந்த, 1950 - 53 இடைப்பட்ட காலத்தில் நடந்த கொரிய போரை தொடர்ந்து, வடகொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளையும் பிரிக்கும், 248 கி.மீ., நீள எல்லை உருவானது. இந்த எல்லையோரம், 20 லட்சத்திற்கும்
Kim Jong Un, North Korea, South Korea, gun fire, 
தென்கொரியா,வடகொரியா

சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன், தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், கொரிய எல்லையில், இருநாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

கடந்த, 1950 - 53 இடைப்பட்ட காலத்தில் நடந்த கொரிய போரை தொடர்ந்து, வடகொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளையும் பிரிக்கும், 248 கி.மீ., நீள எல்லை உருவானது. இந்த எல்லையோரம், 20 லட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள், இன்றளவும் நிலத்தில் காணப்படுகின்றன. ஆகையால், இங்கு யாரும் நுழைந்து விடாமல் இருக்க, முறுக்குக் கம்பிகளால் ஆன வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.


latest tamil news


இருநாட்டு பாதுகாப்புப் படையினரும், எல்லையில், 24 மணிநேரமும் கண்காணிக்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றத்தை தணிக்க, 2018ல், இங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் இருநாடுகளும் ஈடுபட்டன. இந்நிலையில், இந்த எல்லைப் பகுதியில், இருநாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே, நேற்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. வடகொரியா ராணுவத்தினர், தென்கொரிய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து, முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரிய ராணுவத்தினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சண்டையில், தென்கொரியா தரப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. எனினும், வடகொரியாவின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. எல்லையில் பதற்றத்தை தணிக்க, வடகொரிய ராணுவத்தை தொடர்பு கொள்ளும் முயற்சிகளில், தென்கொரியா ஈடுபட்டு உள்ளது.

பல நாட்களுக்குப் பின், வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே, எல்லையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202005:48:43 IST Report Abuse
ஆப்பு வட கொரியா நிலைமை மோசமாயிட்டு வர்ர மாதிரி தெரியுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X