புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்., ஏற்கும்: சோனியா

Updated : மே 04, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (211) | |
Advertisement
புதுடில்லி: சொந்த ஊர் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணத்திற்கான செலவை காங்., ஏற்கும் என அக்கட்சி தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.இது குறித்து காங்., தலைவர் சோனியா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: குடிமக்களுக்கான சேவையில், ஒற்றுமையுடனும், அவர்களுடன் தோளோடு தோள் நிற்பதும் காங்கிரசின் பங்களிப்பாகும். நமது தொழிலாளர்களே நாட்டின்
Sonia Gandhi, Congress, Politics, Migrant Workers, Train, Rail, Railways, Indian Railways, Govt of India,coronavirus, coorna, covid-19, corona outbreak, corona updates, corona cases, travel ban, lockdown, lockdown extension, சோனியா, காங்கிரஸ், புலம்பெயர்ந்த, தொழிலாளர்கள், ரயில் பயணம், டிக்கெட், கட்டணம்

புதுடில்லி: சொந்த ஊர் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணத்திற்கான செலவை காங்., ஏற்கும் என அக்கட்சி தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது குறித்து காங்., தலைவர் சோனியா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: குடிமக்களுக்கான சேவையில், ஒற்றுமையுடனும், அவர்களுடன் தோளோடு தோள் நிற்பதும் காங்கிரசின் பங்களிப்பாகும். நமது தொழிலாளர்களே நாட்டின் வளர்ச்சியின் தூதர்கள். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்து அதன் பொறுப்பை அங்கீகரித்த அரசு, அதற்கான போக்குவரத்து மற்றும் உணவுக்காக ரூ.100 கோடி வரை செலவழித்தது. பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி ரயில்வே அமைச்சகம் அளிக்கிறது. இவையெல்லாம் செய்ய முடிந்த அரசுக்கு, இது போன்ற கடும் துயரமான நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏன் அளிக்க முடியவில்லை?


latest tamil news


புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை, அவர்களுக்கு இலவச போக்குவரத்தும் இல்லை. நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசும், ரயில் அமைச்சகமும் ரயில் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலிப்பது என்பது பெரும் கவலைக்குரியது. காங்கிரசின் கோரிக்கைகளை மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் முற்றிலும் புறக்கணித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை காங்., கட்சி ஏற்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (211)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
09-மே-202008:34:39 IST Report Abuse
B.s. Pillai What is she blabbering ? without knowing the facts.The news is the expenses for arranging such special trains for transporting displaced labour force is shared between the State and central government. The news is given big for gaining popularity without actually spending any money. If she is so worried, she can finance the buses transporting the labour, in addition to what the both Governments do. Why such big publicity in News for printing wrong news ?
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
04-மே-202022:21:39 IST Report Abuse
adalarasan இவர் கூறுவது பித்தலாட்டம்செலவை எங்கிருந்து கிளபிக்கிறார்களோ அந்த, மாநிலமும்,மத்திய அரசும் ஏற்கிறதுடிக்கட்டுகளும், manila அரசு, கொடுக்கிறது, அவர்களின் லிஸ்ட் படிமாநில அரசின் தேவைக்கு ஏற்ப அவர்களின் வேண்டுதலின் பேரில், ரயில்வே நிர்வாகம்,வண்டி, ஏற்பாடு சேருகிறது இதுதான் உண்மை?கேரளா அரசு, மக்களிடம், பணம் டிக்கெட்டிற்கு பெற்றுக்கொள்ளவில்லை என்றும், ராஜஸ்தான் அரசுதான், டிக்கட் பணத்தை, மக்களிடம் பெற்றுக்கொண்டு இறுக்கியதுஆகையால், சோனியா அவர்கள், கேரளா அரசுக்கு நன்கொடை கொடுக்கலாம்?என்னவென்றுதெரியாமல் உளறுவது மிகவும் தவறு தனியார் பஸ்களில், ராஜஸ்தானிலிருந்து, உத்தரப்பிரதேசத்திற்கு,ருபாய், நாலாயிரம் பெற்றுக்கொண்டு, மக்களை, கொண்டு சென்ரரிகிறது என்பதும் செய்தி, வெளியாகி இருக்குதுஅந்த லிஸ்டை, காங்கிரஸ்,ஆட்சி செய்யும் ராஜஸ்தான் அரசிலிருந்து லிஸ்டை பெற்றுக்கொண்டு, அந்த ஏழை மக்களுக்கு, திருப்பி கொடுக்க சோனியாஜி, நடவடிக்கை எடுப்பாரா?
Rate this:
Cancel
sundara - tirunelveli,இந்தியா
04-மே-202020:19:53 IST Report Abuse
sundara Govt should free Pizza to all migrated workers who travel by train . Food package. 😀😀
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X