திண்டுக்கல் மாவட்டத்தில் பறந்து பார்ப்போம்.

Updated : மே 04, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisementlatest tamil news


நாட்டிலேயே திருப்பதிக்கு அடுத்த படியாக வருமானம் உள்ள பழநி முருகன் கோவிலும், உலகத்தில் உள்ளவர்கள் அனைவரது மனதையும் கவரும் கொடைக்கானல் சுற்றுலா தலத்தையும் கொண்டது திண்டுக்கல் மாவட்டம்.


latest tamil news


திண்டுக்கல் மலைக்கோட்டையும் அபிராமி அம்மன் கோவிலும் திண்டுக்கல்லின் முக்கிய அடையாளங்கள், இப்போது திண்டுக்கல் பிரியாணி இன்னும் பிரபலம்.


latest tamil news


Advertisement

கோயம்பேடு காய்கறி மார்கெட்டை தற்போது கொரோனா மார்கெட் என்று ஆளாளுக்கு வசைபாடினாலும் பல ஆயிரம் பேர்களின் வாழ்வாதாரத்தின் மையப்பகுதி அதுதான்.கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு அடுத்த படியாக பெரிய காய்கறி மார்கெட் எது என்றால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்கெட்டை சொல்லலாம்.


latest tamil news


பூட்டு மற்றும் தோல் பதனிடும் தொழிலுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் பல வரலாற்று பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


latest tamil news


1985 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும். திண்டுக்கல் தொன்று தொட்டு சேரர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது.


latest tamil news


வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது.


latest tamil news


இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.


latest tamil news


விவசாயிகளை வாழவைக்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒரு பெரிய வணக்கத்தை வைக்கும் இந்த வேளையில் அந்த மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் பஸ் நிலையம் மலைக்கோட்டை அபிராமி அம்மன் கோவில் பழநி மலைக்கோவில்,கொடைக்கானல் படகு குழாம் போன்ற பகுதிகளை பறக்கும் கேமிராவில் படமாக்கி இங்கு தந்துள்ளோம்.
படங்கள் உதவி:பழநி மணிகண்டன்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
05-மே-202018:14:50 IST Report Abuse
Krishnamurthy Venkatesan 30 வருடங்களுக்கு முன்னர் வாங்கிய இடத்திற்கு மதிப்பு இன்னும் கூடவில்லை. 10 சத விகிதம்தான் ஏறியுள்ளது.
Rate this:
Cancel
N Maheswaran - Itanagar,இந்தியா
05-மே-202012:27:13 IST Report Abuse
N Maheswaran மும்பை சித்தி விநாயகர் கோயில், ஷீரடி சாயிபாபா கோயில், ஜம்மு வைஷ்ணவி தேவி கோவில் ஆகியவை பழனி முருகன் கோயிலை விட அதிகம் வருமானம் பெரும் கோவில்களாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X