சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா ரவுண்ட் அப் : மதுரையில் ஒருவருக்கு தொற்று உறுதி

Updated : மே 04, 2020 | Added : மே 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:மதுரை மாவட்டத்தைசேர்ந்தஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து மதுரை மாவட்டம் சாப்டூர் பழையூருக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்து 3 கார்களில் 28 பேர் திரும்பினர். இதில் 35 வயது டெய்லருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இந்த ஊரைச் சேர்ந்த இவர்கள் குடும்பமாக சென்னை செங்குன்றத்தில் வசித்தனர். கொரோனா பீதியில் உரிய அனுமதியின்றி வாடகை கார்களில்

மதுரை:மதுரை மாவட்டத்தைசேர்ந்தஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை மாவட்டம் சாப்டூர் பழையூருக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்து 3 கார்களில் 28 பேர் திரும்பினர். இதில் 35 வயது டெய்லருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இந்த ஊரைச் சேர்ந்த இவர்கள் குடும்பமாக சென்னை செங்குன்றத்தில் வசித்தனர். கொரோனா பீதியில் உரிய அனுமதியின்றி வாடகை கார்களில் ஊருக்கு புறப்பட்டனர். ரூ.40 ஆயிரம் வாடகை கொடுத்தனர்.



latest tamil news




ஊர் திரும்பிய இவர்கள் குறித்து தகவலறிந்த அதிகாரிகள் மதுரை சின்னஉடைப்பு தனிமை முகாமில் தனிமைப்படுத்தினர். கொரோனா பரிசோதனையில் டெய்லர் ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது. 4 பேருக்கு பாதிப்பில்லை. மற்ற 23 பேரின் பரிசோதனை முடிவு இன்று தெரியும்.


latest tamil news



கலக்கத்தில் சுகாதாரத்துறை

நகரில் தொடர்ந்து பாதிப்பு தென்பட்ட நிலையில் புறநகர் பகுதி கட்டுக்குள் வந்தது. இறுதியாக ஏப்.26ல் உசிலம்பட்டி மே 1ல் கீழவளவு கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். அதன்பின் பாதிப்பு இன்றி நிம்மதி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு 450 கி.மீ. பயணம் செய்து புறநகர் பகுதிக்கு ஒருவர் 'விலை' கொடுத்து கொரோனாவை கொண்டுவந்தது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் எத்தனை பேர் இப்படி சென்னையில் இருந்து தப்பி வருவார்களோ என்ற கலக்கமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


தகவல் சொல்லுங்க...



பாதிப்புள்ள பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி சொந்த ஊர் திரும்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பேரிடர் சட்டத்தில் இடம் உள்ளது. இதையும் மீறி பலர் சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு படையெடுக்கின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு நீங்கிய மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் ஒரு 'ரவுண்ட்' வரும் அச்சம் உள்ளது.யாராவது அப்படி வந்தால் உடனடியாக போலீஸ் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரவலை தடுக்க முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
04-மே-202023:25:54 IST Report Abuse
Subramanian காவல்துறை இந்த தருணத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாவட்ட எல்லைகள் எல்லாம் மூடிய பின்பு எப்படி காரில் ஊருக்கு வந்தார்கள். எங்கேயோ தவறு நடந்து இருக்கின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X