ஊரடங்கை மே இறுதி வரை நீட்டிக்க ஜப்பான் முடிவு

Updated : மே 04, 2020 | Added : மே 04, 2020
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கினை அந்நாட்டு அரசு மே இறுதி வரை நீட்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகவலை டோக்கியோ கவர்னர் யுரிகோ உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்று கவர்னர் தெரிவித்தார்.ஏற்கனவே மே 7 வரை ஜப்பானில் உள்ள 47 மாகாணங்களில் ஊரடங்கினை

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கினை அந்நாட்டு அரசு மே இறுதி வரை நீட்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



இத்தகவலை டோக்கியோ கவர்னர் யுரிகோ உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்று கவர்னர் தெரிவித்தார்.

ஏற்கனவே மே 7 வரை ஜப்பானில் உள்ள 47 மாகாணங்களில் ஊரடங்கினை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் அனைத்து நாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



ஜப்பானில் இதுவரை 14,877 பேர் கொரோனா பாதி்ப்புக்கு ஆளாகி உள்ளனர். 487 பேர் பலியாகி உள்ளனர். 3,981 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X