உடுமலை:தேவை குறைந்துள்ளதால், மரக்கரி விற்பனையாகாமல் தேங்கியுள்ளதால், உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், சீமை கருவேலன் மரங்களை வெட்டி, மூடாக்கு போல் அமைத்து, எரியூட்டி, மரக்கரி தயாரிப்பில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி உற்பத்தி செய்யப்படும் மரக்கரி, கறிக்கோழி பண்ணைகளிலும், இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.சீசன் இல்லாத சமயங்களில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, மரக்கரியை விலைக்கு வாங்கி, இருப்பு வைத்து, விற்பனை செய்கின்றனர். இவ்வாறு, சில மாதங்களுக்கு முன், மரக்கரியை வாங்கி இருப்பு வைத்தனர். 5 முதல் 7 கிலோ கொண்ட ஒரு டின் மரக்கரி, 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கறிக்கோழி பண்ணைகளில், உற்பத்தி குறைப்பு, ஊரடங்கு உட்பட காரணங்களால், மரக்கரிக்கான தேவை முற்றிலுமாக குறைந்தது. இதனால், விற்பனை முற்றிலுமாக சரிந்து, உற்பத்தியாளர்கள் பாதித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE