உடுமலை:சின்னவெங்காயத்துக்கு விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தரம் பிரித்து இருப்பு வைக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காயம் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், நாற்று நடவு முறைக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஒரு பாத்தி அளவிலான, நாற்றுகள், 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு ஏக்கருக்கு, 13 பாத்தி அளவுக்கான நாற்றுகள் தேவைப்படும். இத்தகைய நாற்று நடவு முறையில், 90 நாளில், வெங்காயத்தை அறுவடை செய்யலாம். அவ்வகையில், தற்போது அனைத்து பகுதிகளிலும் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. உள்ளூர் சந்தைகளில், கிலோ, 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை சின்னவெங்காயம் விற்பனையாகிறது. இருப்பினும், அதிக விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், சின்னவெங்காயத்தை தரம் பிரித்து இருப்பு வைத்து விற்பனை செய்ய விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE