கோவில் உபரி நிதியில் ரூ.10 கோடி; அறநிலைய துறை உத்தரவு வாபஸ்

Updated : மே 05, 2020 | Added : மே 05, 2020 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை : 'முதல்வர் நிவாரண நிதிக்கு 47 கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கும்படி அறநிலைய துறை முதன்மை செயலர் பிறப்பித்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்படும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.'தினமலர்' நாளிதழின் வேலுார் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனு: ஹிந்து சமய அறநிலைய துறையின் முதன்மை செயலர் ஏப்ரல் 22ல் ஒரு
tamil nadu, tn news, tamil news, coronavirus, corona, covid 19, coronavirus relief fund,
கோவில்,உபரிநிதி

சென்னை : 'முதல்வர் நிவாரண நிதிக்கு 47 கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கும்படி அறநிலைய துறை முதன்மை செயலர் பிறப்பித்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்படும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

'தினமலர்' நாளிதழின் வேலுார் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனு: ஹிந்து சமய அறநிலைய துறையின் முதன்மை செயலர் ஏப்ரல் 22ல் ஒரு சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். 47 கோவில்களின் நிர்வாக அதிகாரி உதவி ஆணையர் துணை ஆணையர் இணை ஆணையர்களுக்கு இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கும்படி அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அறநிலைய துறை சட்டத்துக்கு எதிரானது. உபரி நிதியை பயன்படுத்துவதற்கான விதிகளில் உள்ள நடைமுறையை மீறுவதாகவும் உள்ளது. 47 கோவில்களுக்கும் வரலாற்று பாரம்பரியம் உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் ஓதுவார்கள் வேத பாராயணிகள் இசை கலைஞர்கள் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும்குறைவானது. இவர்களின் நிலை குறித்து அரசுக்கு மனு அனுப்பி உள்ளேன். சுற்றறிக்கை பிறப்பிக்க முதன்மை செயலருக்கு அதிகாரமில்லை. எனவே சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கோவில்களை சார்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு நிதி உதவிவழங்க ஏற்பாடு செய்யும்படி அறநிலைய துறை முதன்மை செயலருக்கு உத்தரவிடவேண்டும்.10 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அதை கோவில்களுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


latest tamil news


இதே போன்று சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி ஆலய வழிபடுவோர் அமைப்பின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் வெங்கடேஷ்குமார் ஆகியோரும் மனுக்கள் தாக்கல்செய்தனர். இம்மனுக்கள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தன.

அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராகி ''சுற்றறிக்கையை திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என்றார். இதையடுத்து சுற்றறிக்கையை திரும்ப பெற்று அதன் விபரங்களை மே 8ம் தேதி தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-மே-202017:28:24 IST Report Abuse
மலரின் மகள் சிறப்பு. மலரின் செய்கை பாராட்டு கூறியது. நிறைய தான தர்மங்கள் செய்து கொண்டுதான் பலர் இருக்கிறார்கள். கோவிலுக்கு பூஜை பொருட்களை கொண்டு சென்று அன்றாட பூசைகளை செய்து கொள்வது. மற்றும் காணிக்கைகளை தருவது. சிறப்பு நாட்களில் அதற்காகவும் தருவது என்று. உண்டியலில் தரும் காணிக்கை அது உபரிநிதிக்காக என்றோ அல்லது அந்த பணத்தை அரசு தேவைப்பட்டால் எடுத்து கொள்வதற்காகவோ அல்ல. அது கோவிலில்லாக ஆகம வழிபாட்டிற்காக உலக செமத்திற்காக செய்யும் பூசை வகைகளுக்காக என்ற நோக்கிலேயே தரப்படுகிறது. அதை அரசு எந்த காரணம் கொண்டும் டுத்து கொள்ள என்னவே கூடாது. அரசுக்கு தான் வரி தருகிறோம், தேவைப்படும் காலத்தில் கூடுதலாக பணமும் தானமாக அனுப்பி வைக்கிறோம், மேலும் நேரடியாகவும் முடிந்த அளவில் உதவிகளை செய்து கொண்டுமிருக்கிறோம். நாம் உண்டியலில் செலுத்திய பணத்தை எடுத்து கொள்வதற்கு சுற்றறிக்கைவிட்டவர் அந்த பதவிக்கு தகுதியானவர் தானா அவர் அதில் தொடர்வது சரியாக இருக்குமா என்று கேட்க தோன்றுகிறது இப்போது. கல்விக்காக செஸ் என்று தனியாகவும் வரி விதித்திருக்கிறார்கள் அந்த பணம் உபரியாக இருக்கிறது என்று அதை குடிப்பவர்களுக்கு கொன்செல்லிங் தருவதற்கு என்று ஒதுக்கி கொள்வார்களோ? நித்திய காரியங்களுக்காக கோவிலுக்கு தருகின்ற நிதியை யாரும் கையாடல் செய்ய கூடாது.
Rate this:
Cancel
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
05-மே-202015:55:13 IST Report Abuse
Selvaraj Chinniah இந்து அறநிலையத்துறை என்ற அமைப்பு. திருட்டு திராவிட கடசியினரால் உருவாக்கப்பட்ட்து. இந்து கோவில் வருமானம். இனிமேல் யாரும் தொட முடியாத அளவுக்கு சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்து கோவில் வருமானம் இந்துவுக்கே என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்து அறநிலைத்துறை என்ற ஒரு துறை நீக்கப்பட வேண்டும். இந்து கோவில்களில், இந்து மட்டுமே, வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். கோவில்களில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க.கணக்கு துறை அலுவலர்கள் நியமிக்கப்படவேண்டும். இதனை டும்களும் இருந்தால் தான், இந்து கோவில். கோவிலாக இருக்கும்.
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
05-மே-202019:00:56 IST Report Abuse
RajanRajanஅறநிலைய துறையை கொண்டுவந்ததே கோவில் சொத்துக்களை ஆட்டைய போடுவதாகவும் மதவாத கலாச்சாரத்தை உருவாக்கி ஆட்சி அதிகாரத்துடன் தெம்பா ஆட்டைய போடுறதுக்காக கட்டுமரத்தாலே உருவாக்க பட்டது . எனவே மக்கள் இந்த கூலிப்படை கூட்டத்தை அடையாளம் கண்டு குரானா வைரஸ் போல மூச்சை புடிச்சு ஒழித்து கட்ட வேண்டும்....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-மே-202015:22:06 IST Report Abuse
Darmavan இப்போதாவது திருத்தி இனிமேல் செய்யாமல் இருப்பார்களா .இல்லை இது தற்காலிகமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X