பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி அறிவித்த நிவாரண உதவி: பட தயாரிப்பாளர்கள் டிஷ்யூம் டிஷ்யூம்!

Updated : மே 05, 2020 | Added : மே 05, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Rajinikanth, Rajini, Corona, superstar rajinikanth, tamil news, tamil nadu news, coronavirus, corona, covid 19

சென்னை: கொரோனா ஊரடங்கில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ ரஜினி அறிவித்த நிவாரண உதவி, தயாரிப்பாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா முதலாளிகளான தயாரிப்பாளர்கள், வரிசையில் நின்று நிவாரண பொருள் வாங்குவதா. இது பெரிய அவமானம் என கூறி உள்ளனர்.

கொரோனாவால் நலிந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு உதவ வேண்டும் என ரஜினியிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் கேட்டார். இதையடுத்து அரிசி, மளிகை போன்ற உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதாக ரஜினி கூற, கே.ராஜன் அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பொருட்களை வந்து பெற்றுக் கொள்ளும்படி தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதை தயாரிப்பாளர்கள் பலர் வரவேற்ற நிலையில் சிலர் இதை அவமானமாக கருதுகின்றனர்.


latest tamil news

கேவலமான விஷயம்


சினிமாவின் முதலாளிகள் தயாரிப்பாளர்கள். அவர்களிடம் சம்பளம் பெறுபவர்கள் நடிகர்கள். ஒருவேளை தயாரிப்பாளர்களுக்கு உதவ நினைத்தால் பண உதவியாக கொடுத்தால் கவுவரமாக இருக்கும். அதைவிடுத்து அரிசியும், மளிகை பொருட்களையும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று வாங்குவது என்பது கேவலமான விஷயம். தயவு செய்து இதை யாரும் செய்து விடாதீர்கள். இது ரஜினிக்கு தெரிந்து நடக்கிறதா இல்லையா என தெரியவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் கூறியுள்ளார்.


தன்மானத்திற்கு இழுக்கு


நிவாரணம் வழங்கியது ரஜினியின் பெருந்தன்மை. இருந்தாலும் அரிசிக்கும், பருப்புக்கும் போய் தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று விடக்கூடாது. அப்படி ஒரு நிலை வரக்கூடாது. இது நம் தன்மானத்திற்கு இழுக்கு. ஒருவேளை அப்படி ஒரு சூழல் வந்தால் இருக்கிற தயாரிப்பாளர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவோம் என நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.


கால்ஷீட் தரலாமே


ஒரு ரசிகனாக, தயாரிப்பாளராக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் தன்மானத்தை நிச்சயமாக உங்களால் காப்பாற்ற முடியும். தயாரிப்பாளர் சங்க டிரஸ்ட்டிற்கு ஒரு படம் பண்ணி கொண்டுத்து, ஒரு நியாயமான சம்பளம் வாங்கி கொண்டு தயாரிப்பாளர்களின் கவுரவத்தை உயர்த்துவீர்கள் என நம்புகிறேன் என பாபு கணேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா என்பது ரஜினி ஒருவர் மட்டும் கிடையாது. அவரைப்போன்று ஏராளமான நடிகர்கள் உள்ளனர். பெரும்பாலான நடிகர்கள் உதவாத நிலையில் ரஜினி அவர் தரப்பில் ஏதோ உதவி செய்து வருகிறார். ரஜினி தானாக முன் வந்து இதை செய்யவில்லை. தயாரிப்பாளர் கே.ராஜன் கேட்டதாலேயே உதவினார். மேலும் ராஜன் கேட்டது கூட நலிந்த தயாரிப்பாளர்களுக்கு தான். அதைகூட சிலர் விமர்சிப்பது வேதனையளிக்கிறது என பல தயாரிப்பாளர்கள் குறைபட்டு கொள்கின்றனர். விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை கருத்தில் கொண்டே சிலர் விமர்சனம் என்ற பெயரில் அரசியல் செய்வதாக இன்னும் பிற தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-மே-202018:09:17 IST Report Abuse
வெகுளி நல்ல மனது கொண்ட ரஜினி உதவுகிறார்... நலிந்த நிலையில் இருப்பவர்கள் அதை பெற்று கொள்கிறார்கள்.... இடையில் ஏன் சிலர் வெற்றுக்கூச்சலிடனும்....
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
05-மே-202017:04:54 IST Report Abuse
Baskar இதை கூத்தாடிகளின் கொண்டாட்டம் என்று சொல்வதா இல்லை வேறு மாதிரி சொல்லலாமா. இவங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லை. இவர்கள் ஆடும் ஆட்டத்துக்கு தான் கூலி வாங்கி விடுகிறார்களே அப்புறம் எதற்கு உதவி செய்ய வேண்டும். எதோ ரஜினிக்கு ஒரு ஆர்வம் தன்னுடன் பணியாற்றும் சகோதர சகோதரிகளுக்கு செய்யும் உதவி என்று நினைத்து உதவி செய்தார். இதை போய் பெரிதுபடுத்தி கொண்டாடுகிறீர்கள். உங்களை புத்தி எப்படி போகும். இரவில் நீங்கள் அடிக்கும் கூட்டத்திற்கு எவ்வளவோ செலவு செய்கிறீர்கள். செய்கிறவனையும் கெடுக்கிறீர்கள். இது தான் நடிகன் நடிகையர் கேவலமான புத்தி.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
05-மே-202016:45:47 IST Report Abuse
Ellamman இது செய்தாலும் வில்லங்கம் தான் போல.....பேசாமல் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு சும்மா இருந்தால் போதும் என்று நினைக்க வைக்கிறது....இல்லை வில்லங்கம் செய்யவேண்டும் என்றே இப்படி செய்கிறதா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X