பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு தாகத்தை தணிக்க ரூ.95 ஆயிரத்துக்கு மது வாங்கி சென்ற ‛குடி'மகன்

Updated : மே 05, 2020 | Added : மே 05, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ஒருவர் ரூ.95 ஆயிரத்துக்கு மதுபானங்களை வாங்கியதற்கான ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 4) முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
Liquor Bills, Vanilla Spirit Zone, social media, netizens, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, lockdown, liquor, Bengaluru, Karnataka Excise Department, Rs 95k, Rs 52k, Bill, Karnataka, மது, பில், ரசீது, கர்நாடகா, பெங்களூரு

பெங்களூரு: கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ஒருவர் ரூ.95 ஆயிரத்துக்கு மதுபானங்களை வாங்கியதற்கான ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 4) முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிபந்தனைகளுடன் 7ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் நேற்று முதல் திறக்கப்பட்ட மதுபான கடைகள் முன்னே ‛குடி'மகன்கள் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குவிந்ததால், அவர்களுக்கு என தனி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், ஊரடங்கினால் இவ்வளவு நாட்கள் எடுத்த தாகத்தை தணிக்க, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒருவர் ரூ.95 ஆயிரத்துக்கும் மற்றொருவர் ரூ.52 ஆயிரத்துக்கும் மதுபானங்கள் வாங்கியுள்ளனர். இது தொடர்பான ரசீதுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக, தனி நபருக்கு மது விற்றதாக சம்பந்தப்பட்ட மதுக்கடை உரிமையாளர்கள் மீது கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
11-மே-202020:29:30 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இவனுக காசைக் கொட்டிக் கொடுத்து சரக்கு வாங்கிக் குடித்து ஜாலியாக இருக்கானுக. இவனுக்களைக் காப்பாற்ற எல்லையில் நமது தேச வீரர்கள் உயிரைக் கொடுத்துக்கொண்டுள்ளார்கள். கேவலமாக உள்ளது.
Rate this:
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
10-மே-202010:00:35 IST Report Abuse
Ganapathy எனக்கு இருக்குற கவலையெல்லாம் ,ரெண்டு சிட்டையையும் பொருத்தி பார்க்கும் போடு, சிட்டைல இருக்கின்ற முதல் பொருளுக்கு ஒரு ருபாய் கூட்டி வைத்து விற்றுள்ளார்கள் . ரெண்டாவது ஐட்டத்திற்கோ பலமடங்கு கூட்டியுள்ளார்கள் . குடிமக்கள் சாரி மதுபிரியர்கள் கவனிக்க , ஏமாந்து விடாதீர்கள் ....
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07-மே-202016:05:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni ரிஷான் லே சிலசமயம் ரொம்பவெநல்லாவே அரிசி கிடைக்கும் சிலசமயம் நான் வெஜ் போல புழு பூச்சிகளுடன் அசுத்தமாயிருக்கும் மக்கள் அதையும்வாங்கி சுத்தம் செய்து அரிசிமாவு செய்து கோலம் போடா யூஸ் பண்ணுறாங்களே இந்தசரயம் கெட்டுப்போனால் என்னாத்துக்கு யூஸ் ஆவுமானேன் டய்லட் தான்கொட்டனும் என்று சொல்லிப்பாங்க எப்படி தான் அந்தகண்ராவினாராம் எடுத்த கூவம் நீரைக்குடிக்குறானுகளே உவே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X