பொது செய்தி

தமிழ்நாடு

மது கடைகள் திறப்பு; தள்ளிப்போட முடிவு?

Updated : மே 06, 2020 | Added : மே 06, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: பொது மக்களின் எதிர்ப்பால், மது கடைகள் திறப்பை தள்ளிப்போட, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.நாடு முழுவதும், வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால், ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில், நேற்று முன்தினம், மது கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக எல்லை பகுதிகளில் உள்ள மக்கள், அங்கு செல்வதால், மாநிலங்களுக்கு இடையில், மக்கள்
Tasmac ,wine shop ,liquor, டாஸ்மாக்,மதுக்கடை,மது

சென்னை: பொது மக்களின் எதிர்ப்பால், மது கடைகள் திறப்பை தள்ளிப்போட, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

நாடு முழுவதும், வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால், ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில், நேற்று முன்தினம், மது கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக எல்லை பகுதிகளில் உள்ள மக்கள், அங்கு செல்வதால், மாநிலங்களுக்கு இடையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, சிரமம் ஏற்படுவதாக கூறி, சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில், நாளை முதல் மது கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு, நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கு, பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது; எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.


latest tamil news


இந்நிலையில்,'மது கடைகள் திறந்தால், கூட்டத்தை கட்டுப்படுத்துவதில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்' என, மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் இருந்து, அரசுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதனால், மது கடைகள் திறப்பதற்கான அறிவிப்பை, திரும்ப பெறுவது தொடர்பாக, அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, மதுக் கடைகள் திறப்பு தள்ளிப் போகலாம் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karunakaran - Chennai,இந்தியா
06-மே-202017:23:07 IST Report Abuse
Karunakaran டாஸ்மாக் விற்பனையில் ஆளுங்கட்சி ஆட்களுக்கும், எதிர்க்கட்சி ஆளுங்களுக்கு நிறைய பணம் வரும். ஒரு மாதம் எதுவும் நினைத்துப் பாருங்கள்.பல கோடிகள். அதுதான் இந்த அவசரம். அறிவு கெட்ட ஆட்சியாளர்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-மே-202013:46:52 IST Report Abuse
g.s,rajan "One Man's Profit is another Man's Loss" ....
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மே-202013:35:35 IST Report Abuse
தமிழவேல் பிற மாநிலத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள் மாநிலங்கள் தாண்டி தனது ஊருக்கே திரும்ப முடியாத நிலையில் எப்படி வெளி மாநிலம் சென்று மது வாங்குவதாக பொய் சொல்கின்றார்கள் ?
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
07-மே-202007:55:40 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுடூ வீலர்ல, ஒத்தையா, பெரிய பையோட போவமுடியாதா? (மது கூடாதுன்ற கொள்கை வெச்சிருக்குறவன் நான்)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X