கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை மது கடை திறப்பு; தடை விதிக்க கோர்ட் மறுப்பு

Updated : மே 06, 2020 | Added : மே 06, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் நாளை மதுக்கடைகள் திறக்கவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித் கோர்ட் ஆன்லைனில் மதுபானங்களை விற்க முடியுமா என்று கேள்வி எழுப்பியது. ஆனால் இதற்கான வழி இல்லை என்று பதில் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று மாலை அளிக்கப்பட்ட தீர்ப்பில மதுக்கடைகள் திறக்க தடை விதிக்க முடியாது என கோர்ட் கூறி விட்டது.latest tamil newsகொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் முடங்கி போய் உள்ளது. 40 நாட்களுக்கும் மேலாக அத்தியாவசிய பொருட்கள் கிடைப்தற்கே அரிய விஷயமாக உள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன்படி தனிக்கடைகள் திறக்கப்படும் நேரம் அதிகரித்துள்ளது. சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் மதுக்கடைகள் நாடு முழுவதும் திறந்து கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன்படி கடந்த 2 நாட்களாக உ பி., மஹாராஷ்ட்டிரா, கர்நாடகா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மது விற்பனை துவங்கியது. இதற்கென குடிப்பழக்கம் உள்ளவர்கள் மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்றபடி மது வாங்கி செல்வதை காண முடிகிறது. ஒரே நாளில் பல கோடிக்கு மது விற்பனை ஆகி வருகிறது.


latest tamil newsஇதற்கிடையில் தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை மதுக்கடைகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க நீதிபதி புஷ்பாநாராயணனை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. விசாணையில் , நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
மனுதாரர் சொல்வது படி கூட்டம் அதிகமாக வரும், சமூகவிலகல் கடைபிடிக்க சாத்தியமில்லை , கொரோனா மேலும் பரவும் என்பதற்கு அரசு அளிக்கும் விளக்கம் என்ன ? உள்ளதா , ஆன்லைனில் மது விற்பனை செய்ய முடிமா ? வீட்டிற்கு டோர் டெலிவரி செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து மதியம் 2;30க்குள் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


ஆன்லைனிலும் மது விற்பனை நடத்தலாம்


இதற்கு பதில் அளித்த தமிழக அரசு: கொரோனா முடிவடைய காலம் ஆகும் என்பதால்
மற்ற கடைகள் போல் மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது. இதில் சமூக விலகல் பின்பற்றப்படும். ஆன்லைனில் மது விற்பனை இல்லை. என்று தெரிவித்தது.

மனு மீதான தீர்ப்பை மாலை 5 மணிக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவில்; மது விற்பனைக்கு தடை இல்லை. அதே நேரத்தில் கடைக்கு வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரு நபருக்கு ஒரு முழு ( புல் ) பாட்டல் மட்டுமே வழங்க வேண்டும். உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.

மேலும் ஆன்லைனிலும் மது விற்பனை நடத்தலாம் என்றும் கூறியுள்ளது. ஆன்லைனில் வாங்குவோருக்கு வாரத்திற்கு 2 முறை மட்டுமே வழங்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
06-மே-202020:34:18 IST Report Abuse
 Sri,India As usual court surrer before Taasmac .
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
06-மே-202019:56:17 IST Report Abuse
Indhuindian ஆன் லைன்ல பணத்தை கட்டி சாராயம் வாங்கினா நாங்க எப்பிடி கல்லா காட்டமுடியும் ஏற்கனவே கடனே உடனே வாங்கி இந்த சாராயம் விக்கற வேலைக்கு வந்தோம் ஆன் லைன் நா எப்படி கடனே அடைகிறது எங்கேந்து மாமூல் கொடுக்கறது
Rate this:
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
06-மே-202019:30:07 IST Report Abuse
Mahendran TC தமிழ்நாடு அரசின் தடுமாற்றம் இதிலிருந்தே தெரிகிறது . ஊரடங்கு முடிந்த பின் டாஸ்மாக் கடைகளை திறந்திருந்தால் எடப்பாடியாருக்கு இன்னும் ஆதரவு பெருகி இருக்கும் .ஆனால் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டார் எடப்பாடியார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X