அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள்:ஸ்டாலின் அழைப்பு

Updated : மே 06, 2020 | Added : மே 06, 2020 | கருத்துகள் (195)
Share
Advertisement
Stalin, DMK, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Covid-19 crisis, MK Stalin, ஸ்டாலின், திமுக, மே7, கருப்புதினம், முழக்கம்

சென்னை: கொரோனா தொற்றை ஒழிப்பதில் தோல்வியடைந்த அரசுக்கு எதிராக நாளை ( மே 7ம் தேதி ) அவரவர் வீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், நாளை (மே 7) முதல் தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா பரவி வரும் சூழலில் அரசின் இந்த முடிவை பல தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: கொரோனா என்னும் கொடூர வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது ஏற்படுத்தும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் அதிகமாக கூடக்கூடாது என சொல்லும் அரசு தான், டாஸ்மாக் கடைகளை திறக்கிறது. அரசு போட்ட சட்டத்தை அரசே மீற சொல்கிறது. இந்த நடவடிக்கையினாலேயே நோய்த் தொற்று அதிகரிக்க போகிறது.

கொரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்டு நடவடிக்கைகள் என கவலைப்படாமல் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் மே 7ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்பு சின்னம் அணிவது என்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


மே 7ம் தேதி காலை 10 மணிக்கு அவரவர் வீட்டின் முன்பு கூடி, கொரோனா ஒழிப்பதில் தோல்வியடைந்த அதிமுக அரசை கண்டிக்கிறோம் என 15 நிமிடங்கள் முழக்கமிடுங்கள். 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் போராட்டம் நடத்தலாமா எனக் கேட்கலாம். மக்களை காக்க வேண்டிய நேரத்தில் காக்கத்தவறிய அரசுக்கு எதிராக எப்போதும் போராடலாம், அதில் தப்பில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (195)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூன்-202008:18:54 IST Report Abuse
ஸ்ரீநிவாஸ்  வெங்கட் திமுக பிரமுகர்கள் மது உற்பத்தி தொழிற்சாலைகள் வைத்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருக்கிறது. அது உண்மை என்றால் அவர்களை உற்பத்தி செய்ய வேண்டாம் என்று கூறலாம். அவர்கள் இந்த தொழிற்சாலையை நடத்தி தான் சாப்பிட வேண்டிய நிலையில் இல்லை. திமுக பிரமுகர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றால், நேராக சென்று அந்த தொழிற்சாலை வாயில் முன்பாக சமூக இடைவெளியுடன் மாஸ் அணிந்து உற்பத்தியை நிறுத்த சொல்லி போராடலாம். அதை விடுத்து தெருவில் நின்று கத்த சொல்வது கேலி கூத்து. உங்கள் கட்டளையை மது பிரியர்கள் மதிக்கமாட்டார்கள். மது அருந்தாதவர்கள் நின்று கத்தியும் பலன் இல்லை. இதில் நீங்கள் எதிர்பார்க்கம் விளம்பரத்தை தவிர்த்து வேறு எதுவும் கிடைக்காது. அப்புறம் மோடி விளக்கு ஏற்றவும், கைதட்டவும் சொன்ன போது திமுகவினர் செய்த விமர்சனம் அனைத்தும் இதற்கும் பொருந்தும். அவற்றை ஸ்டாலின் சார் தேடி படித்து பார்க்கவும்.
Rate this:
Cancel
vigneshh - chennai,இந்தியா
10-மே-202017:58:16 IST Report Abuse
vigneshh தமிழ் மக்களையே எல்லாரும் கூடுங்கள் இந்த சுடாலின், கருணாநிதி குடும்பத்தார் வீட்டு முன்பு, கொள்ளை அடித்த பணம், சொத்து எல்லாம் திருப்பி தர.
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
09-மே-202018:19:49 IST Report Abuse
Tamilselvan மதுவை தமிழகத்திற்கு கொண்டு வந்த மஞ்சள் துண்டு கும்பல் வீட்டு முன் போராட்டம் நடத்தலாம். இப்பவும், தனது கட்சிக்காரர்களை,கண்டிக்காமல் மது உற்பத்தி செய்வதை ஆதரிக்கும் சுடலை வீட்டு முன் போராட்டம் நடத்தலாம். தமிழ்நாட்டை குட்டி சுவர் ஆக்கிய இந்த கும்பல் மீண்டும் பதவிக்கு வந்து தங்கள் கொள்ளையை மீண்டும் தொடர துடிக்கின்றனர்.மக்கள் அதை தடுத்து, இந்த கும்பல் செய்த பாவங்களுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்.வீராணம் முதல் ஸ்பெக்ட்ரம் வரை இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை மீட்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X