பெட்ரோல், டீசலின் கலால் வரியை உயர்த்தியது அநியாயம்: ராகுல்

Updated : மே 06, 2020 | Added : மே 06, 2020 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசலின் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியிருப்பது நியாயம் இல்லாத செயல் என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்தார்.பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை காங்., கடுமையாக விமர்சித்துள்ளது.இதுகுறித்து காங்., எம்.பி.,
petrol, diesel, Rahul, Congress, Rahul Gandhi, central govt, fuel price, காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி

புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசலின் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியிருப்பது நியாயம் இல்லாத செயல் என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்தார்.

பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை காங்., கடுமையாக விமர்சித்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து காங்., எம்.பி., ராகுல் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் அனைவரும் ஈடுபட்டு வருவதால், அவர்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயம் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதில், அதன் மீது கூடுதல் கலால் வரியை மத்திய அரசு விதித்ததில் நியாயமே இல்லை. இதனை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
07-மே-202006:43:18 IST Report Abuse
natarajan s அரசு கலால் வரி உயர்த்தியது என்றால் அது சம்பந்தப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கொடுக்க வேண்டியது. 70 டாலருக்கு கச்சா எண்ணெய் விலை இருந்தால் அதன் மீது (உதாரணத்துக்கு ) 20 % excise duty கணக்கிட்டால் 14 ரூபாய் அரசுக்கு கிடைக்கும், இதுவே 40 டாலர் என்றால் அதே 20 % என்றால் 8 ரூபாய்தான் கிடைக்கும். அதனால் அந்த இழப்பை ஈடு கட்ட அரசு excise duty ஐ ஏற்றியுள்ளது. இந்த கூடுதல் வரியை எண்ணெய் நிறுவங்கள்தான் கட்டும். அவர்களும் கச்சா எண்ணெய் விலை குறைப்பினால் இறக்குமதி செலவு குறையும். பொது மக்களுக்கிடம் இது பாதிப்பை ஏற்படுத்தாது.
Rate this:
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
07-மே-202002:24:05 IST Report Abuse
மண்ணாந்தை "பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும்" ஆ ... என்ன சார் சொல்றீங்க. அவர் தப்பா சொல்றாரா... இல்லை உங்கள் செய்தியாளர் தப்பா சொல்றாரா... இல்லை எனக்குத்தான் தெரியலையா.... ?
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
07-மே-202000:42:10 IST Report Abuse
unmaitamil பரவா இல்லை. நாட்டுக்காக அதிக விலை கொடுக்க மக்கள் தயார். பட்டயா, தாய்லாந்திலே என்ன விலைனு தான் நீ கவலைப்படணும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X