ஊரடங்கிற்கு பின் என்ன திட்டம்? பிரதமர் மோடிக்கு சோனியா கேள்வி!

Updated : மே 08, 2020 | Added : மே 06, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement
PM,Modi,Sonia,SoniaGandhi,congress,பிரதமர்,மோடி,சோனியா,காங்கிரஸ்

புதுடில்லி: ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளுக்கு தீர்வு காண, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பதை தெரிவிக்குமாறு, பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர், சோனியா கேள்வி எழுப்பியுள்ளார்.

டில்லியில், சோனியா தலைமையில், காங்., ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நீட்டிக்கப்படுமா?

இக்கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, காங்., தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: 'மே, 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது. அது மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படியென்றால், மத்திய அரசு, எதன் அடிப்படையில், ஊரடங்கை நீட்டிக்கப் போகிறது? 'ஊரடங்கு முடிந்த பின் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் என்ன? இவற்றுக்கு விளக்கம் அளிக்கச் சொல்லி, மாநில முதல்வர்கள், மத்திய அரசைக் கேட்க வேண்டும்' என, சோனியா கேட்டுக் கொண்டார்.

கொரோனா பிரச்னைக்கு இடையிலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள், சிறப்பாக கோதுமை அறுவடை மேற்கொண்டதற்கு, அவர் பாராட்டு தெரிவித்தார். வெளிமாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் வீடு திரும்ப, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள், நீரிழிவு, இதய நோய் உள்ளவர்களை உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டும் என, ராகுல் வலியுறுத்தினார். முன்னாள் நிதியமைச்சர், சிதம்பரம், மாநிலங்கள் நிதியின்றி தவிக்கும் நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்காமல் உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.


வருவாய் இழப்பு:

மத்திய அரசு, மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிப்பதில்லை என்றும், பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்னும் எதுவும் அறிவிக்காதது ஏன் எனவும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார். ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீளவும், பொருளாதாரத்தை சீரமைக்கவும், இரு திட்டங்கள் கைவசம் உள்ளதாக, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்.

ஏற்கனவே, 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய அரசு பிரத்யேக ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்தால் தான், மாநிலங்கள் செயல்பட முடியும் என கூறினார்.

சத்தீஸ்கர் முதல்வர், பூபேஷ் பாகேல், மாநிலத்தில், 80 சதவீத சிறு தொழில்கள் இயங்கத் துவங்கி விட்டதாகவும், 85 ஆயிரம் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.

''கோடிக்கணக்கான சகோதர - சகோதரிகள் கொரோனாவால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அவற்றின் மீதான உற்பத்தி வரி, கூடுதல் வரி ஆகியவற்றை உயர்த்தியிருப்பது நியாயமற்றது''
- ராகுல், காங்., - எம்.பி.,

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
07-மே-202022:15:38 IST Report Abuse
adalarasan இது என்ன கேள்விஉங்கள் கட்சி ஆளும் பஞ்சாப், உ ங்கள் ஆதரவில் உள்ள, மஹாராஷ்டிரா என்னே செய்யும் என்று உங்களால் முடிவு செய்ய முடியுமா? இது போன்ற விஷயங்களில், மத்திய அரசு, மாநில அரசுடன், பேசி, முடிவு,சில தினங்களுக்கு முன் அறிவிக்கிறார்கள்?இந்த வைரஸ்,பரவுதை யாராலும் சரியாக கணிக்க முடியாது, ஆகையால் வாயை பொத்திக்கொண்டு இருக்கவும்சமயம் வரும்போது சொல்வார்கள்என்ன முடிவு எடுத்தாலும் எதிர்மறை , அபிப்ராயம் தான் உங்களுக்கு,அதனால், ஏன் வீண் கவலை?உங்கள் மருமகன், வர்த்தகம் பற்றி கவலையா? புரியவில்லை?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
07-மே-202021:11:43 IST Report Abuse
madhavan rajan உங்களுக்கு பின்னால் காங்கிரசுக்கு யார் தலைவர் என்ற திட்டத்தை நீங்க தயார் பண்ணிட்டீங்களா? அது ரெடியான உடனே இதுவும் ரெடியாயிடும். நீங்க உங்க பையன் உங்க மாப்பிள்ளை இப்பெல்லாம் வெளிநாட்டு பாக்குறீங்க எதுக்காக பாக்குறீங்க என்பதையே உங்கள் கட்சி தலைவர்களுக்கு சொல்றதில்ல. இதுல அரசாங்க திட்டத்தை அட்வான்சா தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப்போறீங்க? நீங்களும் உங்க மகனும் பேசாம அமைதி காத்தால் அதுவே நீங்கள் நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய நன்மை. அத செய்யுங்க. ப்ளீஸ்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
07-மே-202021:10:11 IST Report Abuse
bal உங்க கட்சிக்காரங்களையும் திமுக காரங்களையும் உள்ளே வக்கிறது தான். திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X