அரசியல் செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: பணிகள் மீண்டும் துவக்கம்

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
அவிநாசி : ஊரடங்கால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அத்திக்கடவு- --- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, மீண்டும் துவங்கியது.கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கனவான, அத்திக்கடவு ---- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், 1,652 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. ஊரடங்கு காலிங்கராயன், நல்லகவுண்டம் பாளையம், போலநாயக்கன்பாளையம், திருவாச்சி, எம்மாம்பூண்டி,

அவிநாசி : ஊரடங்கால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அத்திக்கடவு- --- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, மீண்டும் துவங்கியது.latest tamil newsகோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கனவான, அத்திக்கடவு ---- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், 1,652 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. ஊரடங்கு காலிங்கராயன், நல்லகவுண்டம் பாளையம், போலநாயக்கன்பாளையம், திருவாச்சி, எம்மாம்பூண்டி, அன்னுார் ஆகிய இடங்களில், நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கால், கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, 150 கட்டுமான தொழிலாளர்கள், பெருந்துறையில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.ஊரடங்கில், மத்திய அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ள நிலையில், அத்திக்கடவு - -அவிநாசி திட்டப் பணி, மீண்டும் துவங்கியுள்ளது.


latest tamil newsதிட்ட கண்காணிப்பு பொறியாளர், சிவலிங்கம் கூறியதாவது:முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மட்டும் வைத்து, கட்டுமானப் பணி துவங்கியுள்ளது. சமூக இடைவெளி திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மருத்துவ சுகாதார பணி கள் துறையின் ஒப்புதல் பெற்ற பிறகே, பணி துவக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில், சமூக இடைவெளியை பின்பற்றி, பணியாற்று வது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இத்திட்டத்திற்கென, ஈரோடு பெருந்துறையில் குழாய் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட துவங்கியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CS CBE - Coimbatore,இந்தியா
07-மே-202012:37:46 IST Report Abuse
CS CBE தேர்தல் வரப்போகிறதென்று அர்த்தம். ஏனென்றால், தேர்தல் சமயங்களில் மட்டுமே அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்தைப் பற்றி பேசுவார்கள். கோவையின் வடக்குப் பகுதியான அன்னூர் வட்டம் இன்னும் திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் நீடிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தைப் பிரித்தவர்கள், அன்னூர் வட்டத்தை அவிநாசி தொகுதியிலேயே விடக்காரணம் என்ன? இன்னும் எத்தனை தேர்தல்கள் அவிநாசி தொகுதி தனித்தொகுதியாகவே இருக்கப்போகிறது?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-மே-202007:20:34 IST Report Abuse
Mani . V ஆமாம், ஆமாம், சீக்கிரமா முடித்தது மாதிரி கணக்கு காட்டி கமிஷனை கையில் வாங்கினால் தான் நிம்மதி.
Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
07-மே-202018:31:16 IST Report Abuse
Thiyagarajanஅது திருட்டு திமுக. இந்த அரசு செம்மையாக செயல்படுகிறது,...
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
07-மே-202005:46:09 IST Report Abuse
siriyaar என்ன பண்ணி என்ன பிரையோஜானம் எடுத்த நல்ல பெயரை ஒரே தவறான முடிவால் இழந்தாகி விட்டது அதிமுக எங்கும் தோற்கும்
Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
07-மே-202010:23:56 IST Report Abuse
Santhosh Gopalவெறும் டாஸ்மாக்கை வைத்து சொல்றீங்களா? நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே? எதோ தமிழ்நாட்டில் மட்டும் திறந்துவிட்டதை போல கூறுகிறீர்கள். பணம் இல்லாமல் அரசை எப்படி நடத்துவது என்று யோசித்தீர்களா? அதுவும் கொரோன நேரத்தில்? அதனால் தான் தாக்குப்பிடிக்க முடியாமல் அணைத்து மாநில அரசுகளும் ஊரடங்கை பாதி தளர்த்தியவுடனே, மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள். போக்குவரத்து இல்லை, தொழிற்சாலைகள் இயங்கவில்லை, டாஸ்மாக் இல்லை, மற்ற அனைத்தும் இயங்காமல் பணம் எங்கிருந்து வரும்? வானத்தில் இருந்து கொட்டுமா? கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா? சுடலை மாதிரியே யோசிக்கிறீர்கள்? ஆனால் அவசர படாதீர்கள், மது விலக்கு நிச்சயம்....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202019:55:46 IST Report Abuse
தல புராணம்//பணம் இல்லாமல் அரசை எப்படி நடத்துவது என்று யோசித்தீர்களா?// சாராயம், திமுக ன்னு கழுவி ஊத்தினவன் திட்டினவன் எல்லாம் இப்போ பொருளாதார நிபுணராகி பணத்தை பத்தி பேசுறான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X