இன்று, சூப்பர் பிளவர் மூன் சாதாரணமாக காண வாய்ப்பு| The last full Super Flower Moon of 2020 will be visible today | Dinamalar

இன்று, 'சூப்பர் பிளவர் மூன்' சாதாரணமாக காண வாய்ப்பு

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (2) | |
சென்னை : இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி, 'சூப்பர் பிளவர் மூன்' நிகழ்வு இன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை, மக்கள் சாதாரணமாக பார்க்கலாம்.சந்திரன், தன் சுழற்சி பாதையில், பூமியில் இருந்து வெகு துாரம் செல்வது, 'அபோஜி' என, அழைக்கப்படுகிறது.அப்போது, பூமியில் இருந்து சந்திரன், 4.௫ லட்சம் கி.மீ., தொலைவில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் வருவது, 'பெரிஜி' என,

சென்னை : இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி, 'சூப்பர் பிளவர் மூன்' நிகழ்வு இன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை, மக்கள் சாதாரணமாக பார்க்கலாம்.சந்திரன், தன் சுழற்சி பாதையில், பூமியில் இருந்து வெகு துாரம் செல்வது, 'அபோஜி' என, அழைக்கப்படுகிறது.



latest tamil news


அப்போது, பூமியில் இருந்து சந்திரன், 4.௫ லட்சம் கி.மீ., தொலைவில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் வருவது, 'பெரிஜி' என, அழைக்கப்படுகிறது.இந்த தருணத்தில், பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான துாரம், ௩.௬ லட்சம் கி.மீ.,யாக இருக்கும்.இந்த பெரிஜி, பவுர்ணமிக்கு நெருக்கத்தில் வரும் போது, 'சூப்பர் மூன்' என, அழைக்கப்படுகிறது. இந்த மாதம், 'பெரிஜி சூப்பர் பிளவர் மூன்' என்ற, வானியல் நிகழ்வை இன்று கண்டுகளிக்கலாம்.



latest tamil news


இதுகுறித்து, பிர்லா கோளரங்க இயக்குனர், சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது: ஒரு நீள் வட்டப் பாதையில், பூமியை சுற்றி வரும் சந்திரன், 27 நாட்களுக்கு ஒரு முறை பூமிக்கு மிக அருகில் வந்து செல்லும். பவுர்ணமி நாளில் நடக்கும் இந்த நிகழ்வு, 'சூப்பர் மூன், பெரிஜி புளூ மூன்' என, அழைக்கப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களாகவே, 'பெரிஜி புளூ மூன்' நிகழ்வு நடந்து வருகிறது.



latest tamil news


இன்று ஆண்டின் நான்காவது, கடைசி நிகழ்வு இன்று நடக்க உள்ளது. இந்த நிகழ்விற்கு ஒவ்வொரு முறையும், ஒரு பெயர் வைக்கப்படுகிறது. இன்று நடக்கும் நிகழ்விற்கு, 'சூப்பர் பிளவர் மூன்' என, பெயரிடப்பட்டுள்ளது. இதை, மக்கள் சாதாரணமாக காணலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X