தினமலர்' நாளிதழ் மற்றும், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' இணைந்து வழங்கும் ஆன்லைன், 'வழிகாட்டி' நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பெற்றோரது பேராதரவுடன் நேற்று துவங்கியது.
நேற்றைய நிகழ்ச்சியில், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ் காந்தி மற்றும் அனிமேஷன், கிராபிக்ஸ் குறித்து, செந்தில்குமார் ஆகியோர் பேசினர். வரும் காலத்தில், எந்தெந்த துறைகளுக்கு வாய்ப்புகள் அதிகம், சிறந்த வேலை வாய்ப்பை பெற, வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் உட்பட, பல்வேறு கருத்துரைகளை, ஆன்லைன் வாயிலாக வழங்கியதோடு, மாணவர்கள் மற்றும் பெற்றோரது கேள்விகளுக்கும் விரிவாக விளக்கமளித்தனர்.

இன்றைய நிகழ்ச்சியில், உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் உதவி தொகைகள் குறித்து, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து எச்.சி.எல்., நிறுவன துணை தலைவர், சுப்பராமன் மற்றும் பி.காம்., ஹானர்ஸ், ஏ.சி.சி.ஏ., படிப்புகள் குறித்து கல்வியாளர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேரலையில் பங்கேற்கின்றனர்.
வரும், 17ம் தேதி வரை தினமும் காலை, 10:௦௦ முதல் 12:௦௦ மணிவரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட துறை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பங்கேற்று, உயர்கல்விக்கான அனைத்து தகவல்களையும் மாணவர்களுக்கு வழங்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற, www.kalvimalar.com என்ற இணையதளத்தில், பெயர், மொபைல் எண், இ- - மெயில் முகவரி மற்றும் மாவட்டம் போன்ற தகவல்களை அளித்து உடனே பதிவு செய்யலாம்.
இந்நிகழ்ச்சியில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் ஆகியவை, 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக பங்கேற்கின்றன. வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜ்ஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன.