சென்னை: 'மதுக் கடைகள் திறப்பதை கண்டித்து, தமிழக மக்கள், இன்று,( 7ம் தேதி) கருப்பு சட்டை, பேன்ட் அணிந்து, திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத்தினருடன் சேர்ந்த, தனது வீட்டு வாசலில் போராட்டம் நடத்தினார். ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் அறிக்கை: கொரோனா நோய் தொற்றில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் பலரும், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

கள வீரர்களான அவர்களுக்கு கூட, பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத, தமிழக அரசை கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்பு நடவடிக்கை பற்றி கவலைப்படாமல், மது கடைகளை திறப்பதில் மட்டும், ஆர்வத்துடன் செயல்படும், தமிழக அரசை கண்டிக்கிறோம்.மாநில அரசு கேட்ட நிதியை, மத்திய அரசு வழங்காததையும் கண்டிக்கிறோம். எனவே, மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக, நாளை ஒரு நாள் மட்டும், கருப்பு சின்னம் அணிய வேண்டும்.
காலை, 10:00 மணிக்கு, தமிழக மக்கள், அவரவர் வீட்டின் முன், ஐந்து பேருக்கு அதிகமாகாமல், 15 நிமிடங்கள் நிற்க வேண்டும் .அப்போது, 'கொரோனாவை ஒழிப்பதில், தோல்வி அடைந்த, அ.தி.மு.க., அரசை கண்டிக்கிறோம்'என, முழக்கமிட்டு, கலைய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE