பொது செய்தி

இந்தியா

சுகாதார பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்: பிரதமர் மோடி

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
Pm Modi, Narendra modi, healthcare workers, coronavirus, covid 19, Prime Minister Narendra Modi, Buddha Purnima, சுகாதார பணியாளர்கள்,  பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர்மோடி,  சுகாதாரபணியாளர்கள், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் உள்ள போலீசார், டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் என பிரதமர் மோடி கூறினார்.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியாத சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில், உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கும். ஆனால், நம்மை ஒரே இடத்தில் கூடாத வகையில் சூழ்நிலை உள்ளது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கான செய்தியும், தீர்மானமும் இந்திய கலாசாரத்தை வழிநடத்துகின்றன. இந்தியாவின் நாகரீகம் மற்றும் பாரம்பரியத்தையும் வளப்படுத்த கடவுள் புத்தர், தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

புத்தர் பிறந்த நாளை முன்னிட்டு, சர்வதேச புத்தமத அமைப்பு டில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தியாகம், அர்ப்பணிப்புக்கு அடையாளமாக விளங்குபவர் புத்தர். சேவைக்கும் கடமை உணர்வுக்கும் மறுபெயர் புத்தர்.


latest tamil newsகொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், தூய்மைபடுத்தவும் ஏராளமானோர் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். கவுரவப்படுத்தப்பட வேண்டியவர்கள். இன்று, உலகளவில், அனைத்து தேவைப்படுபவர்களுக்கும், பிரச்னையில் உள்ளவர்களுக்கும், பாகுபாடின்றி இந்தியா உதவி வருவதுடன், ஆதரவு அளித்து வருகிறது.
இனி வரும் காலங்களிலும் உதவுவோம். கொரோனாவை வெற்றி கொள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். மனித நேயத்திற்காகவும், உலக நாடுகளுக்காகவும் இந்தியா உழைத்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் பணியில் உள்ளவர்களுக்கு தலைவணங்குகிறேன். கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுபவர்களுக்காக விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
07-மே-202020:03:53 IST Report Abuse
Ray டாஸ்மாக்குக்கு கொடுத்த போலீஸ் முறைப் படுத்தலை கோயம்பேடுக்கு கொஞ்சமாவது சிந்தித்திருக்கலாம் அள்ளிக் கட்டுவதில் பிஸியாயிருந்து விட்டார்களோ? ஆமை புகுந்த வீடாகிப் போனது கோயம்பேடு மார்க்கெட் திருமழிசை வேலூர் அப்படியே கிஷ்ணகிரி போயி காய்கனி வாங்கிக்கிடுங்கன்னு சொல்லிடலாம் அங்கேதான் கொரோன குறைச்சலாயிருக்கு
Rate this:
Cancel
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
07-மே-202019:48:45 IST Report Abuse
s.sivarajan சுகாதார பணியாளர்களைப்போல் அரசியல்வாதிகளும் பாராட்டுக்குரியவர்களாக தம் செயல்களின் மூலம் மாறவேண்டும்
Rate this:
Cancel
AXN PRABHU - Chennai ,இந்தியா
07-மே-202019:28:52 IST Report Abuse
AXN PRABHU வாயை மட்டுமே உபயோகிக்கும் நம் பிரதமர் எப்போதுதான் இதயத்தையும் மூளையையும் தனது அதிகாரத்தையும் சாமானிய மக்களுக்காக உபயோகிப்பர் என்று தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X