பிரேசில் அதிபர் ஆட்சிக்கு அதிகரிக்கும் நெருக்கடி; அடுத்து என்ன?

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020
Share
Advertisement
Brazil, Bolsonaro, President, Covid19, CoronaVirus, பிரேசில், போல்சனாரோ, அதிபர், கொரோனா, வைரஸ், கோவிட்19

பிரேசிலியா: பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோ கடந்த மே 3ம் தேதி அதிபர் மாளிகை முன்பு திரண்ட மக்களிடம் உரையாற்றினார். கொரோனா தாக்கத்தை அடுத்து பிரேசிலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ராணுவ ஆட்சியை மீண்டும் கொண்டுவந்து கொரோனாவை வேறோடு அழிக்க போல்சனாரோ எதிர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் அவரது ஆதரவாளர்களான வலதுசாரியினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவரது உரையை காண ஆர்வமாக இருந்தனர். மக்களுடனான அதிபரது உரை பேஸ்புக் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. பிரேசில் தேசிய கொடியை ஏந்தி மக்கள் ஆரவாரம் செய்தனர்.


latest tamil news


பிரேசிலில் இதுவரை ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அதில் 7,900 பேர் மரணம் அடைந்துள்ளனர். போல்சனாரோ பதவி விலக வேண்டுமெனவும் அங்கு ராணுவ ஆட்சி கொண்டுவர வேண்டுமெனவும் பிரேசில் எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. கொரோனாவை விட கொடியது, கொரோனாவால் பிரேசிலில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை. இதனால் கொரோனா தாக்கம் ஓய்ந்த பிறகு பலர் வேலை இழக்க நேரிடுமென கூறப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் லூயீஸ் ஹென்ரிக் மேண்டல்லாவை கொரோனா காலத்தில் சரியான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என குற்றஞ்சாட்டி அதிபர் போல்சனாரோ பதவி நீக்கம் செய்தார். இது சர்ச்சைக்குள்ளாகியது.


latest tamil news


சட்ட அமைச்சர் செர்ஜியோ மோரோ கடந்த ஏப்., மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஃபெடரல் தலைமை அதிகாரியை தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அதிபர் போல்சனாரோ, பதவியில் இருந்து நீக்கினார் என குற்றஞ்சாட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் பிரேசிலில் அதிகரித்தால் போல்சனாரோ ஆட்சி கலையும் வாய்ப்பு அதிகரிக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்., 28-ம் தேதி நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில் பிரேசிலில் 38 சதவீதம் பேர் போல்சனாரோ ஆட்சிக்கு ஆதரவாகவும் 33 சதவீதம் பேர் ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X