ஆந்திர ஆலையில் அதிகாலையில் நடந்தது என்ன? திடுக் தகவல்| Vizag gas leak: All you need to know about Andhra Pradesh chemical plant | Dinamalar

ஆந்திர ஆலையில் அதிகாலையில் நடந்தது என்ன? திடுக் தகவல்

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (39)
Share
Vizag Gas Leak, Vishakapatnam, Vizag Gas Tragedy, LG Polymers, Bhopal Gas Tragedy, Andhra Pradesh,ஆந்திரா, காஸ்கசிவு, விசாகப்பட்டினம்,

விசாகப்பட்டினம் : ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி திறக்கப்பட்டதால் வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக குறைந்த ஆட்களே பணியில் இருந்தாதல் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என மாநில டிஜிபி கூறியுள்ளார்.


13 பேர் பலி


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சர்வதேச நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக கடந்த பல நாட்களாக மூடப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு இந்த தொழிற்சாலை போதிய முன்னெச்சரிக்கை இன்றி, நேற்று (மே .6) நள்ளிரவு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 2: 30 மணியளவில் பராமரிப்பில்லாமல் இருந்த டாங்குகளில் இருந்த வாயு கசிய துவங்கியது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news
மயங்கி விழுந்தனர்


அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள 3 கிராமங்கள் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸ் கசிவு ஏற்பட்டதும், சாலைகளில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் அருகில் நின்றவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டூவிலர்களில் சென்றவர்கள், வாயு கசிவால் பாதிக்கப்பட்டு பள்ளத்தில் விழுந்தனர்.
மற்றொரு பெண், இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். ஏராளமானோருக்கு கண்களில் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. சாலைகளில் மயங்கி கிடந்தவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், ஒரே கட்டிலில் 3 பேர் வரை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். பலருக்கு சுயநினைவு இல்லாமல் உள்ளனர்.


வெளியே வர வேண்டாம்


அதிகாரிகள் கூறுகையில், வெளியேறியே வாயு ஆபத்தானது இல்லை. ஆனால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுத்துவதுடன், நரம்புகளை பாதிக்கும். வாயு கசிவு ஏற்பட்டதும், கண்களிலும் தோலிலும் எரிச்சல் ஏற்பட்டது எனவும், மூச்சு விடுவதில் சிரமம் உண்டானது என மக்கள் தெரிவித்தனர். இந்த தொழிற்சாலையில் இருந்து 3 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். முகமூடி அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


கசிவு ஏன்


போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 5 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட டாங்கில் இருந்து வாயு வெளியேறியுள்ளது. ஊரடங்கு காரணமாக, இந்த டாங்குகள் பராமரிப்பு செய்யவில்லை. இதனால், வேதியியல் மாற்றங்கள் உண்டானது. அதற்குள், வெப்பம் உண்டானது. இதனால், வாயு கசிவு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


விசாரணை


தொழிற்சாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாயு கசிவு தற்போது கட்டுக்குள் உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக குணமடையும் வகையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


ஒப்பீடு


ஆந்திராவில் விஷவாயு கசிய துவங்கியதும், இந்த சம்பவத்தை 1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவுடன் ஒப்பிட்டு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர துவங்கியுள்ளனர். அந்த சம்பவத்தில், 3,500 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.


முதல்வர் விரைவு

இதனிடையே, விசாகப்பட்டினத்திற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விரைந்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X