பொது செய்தி

இந்தியா

இந்தியர்களை மீட்க ஐ.என்.எஸ்., ஜலஷ்வா போர் கப்பல் மாலத்தீவை அடைந்தது

Updated : மே 07, 2020 | Added : மே 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Maldives, INS jalashwa Stranded Indians, coronavirus, covid 19, corona,
 இந்தியர்கள், ஐஎன்எஸ், ஜலஷ்வா, போர் கப்பல், மாலத்தீவு

புதுடில்லி: ஆபரேஷன் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஐ.என்.எஸ்., ஜலஷ்வா போர் கப்பல் மாலே துறைமுகத்தை சென்றடைந்தது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் தொழிலாளர்களாக உள்ள இந்தியர்கள் பலர் இச்சமயத்தில் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்புகின்றனர். அவர்களின் நிலையைக் கருதி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 16 ஆயிரம் பேரை விமானம் மூலம் அழைத்து வர உள்ளது. அதே போல் மாலத்தீவில் தவிக்கும் ஆயிரம் பேரை அழைத்து வர ஐ.என்.எஸ்., மகர் மற்றும் ஐ.என்.எஸ்., ஜலஷ்வா போர் கப்பல்களை அனுப்பியுள்ளது. இவ்விரு கப்பல்கள் மூலம் அங்குள்ள ஆயிரம் பேரை அழைத்து வருகின்றனர்.


latest tamil news


இதில் ஐ.என்.எஸ்., ஜலஷ்வா போர் கப்பல் 2 நாள் பயணித்து இன்று காலை மாலே தீவை சென்றடைந்தது. இவை இன்று இந்தியர்களை ஏற்றிக்கொண்டு கொச்சி துறைமுகத்திற்கு திரும்பும். அங்கிருந்து அவரவரின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். கடலில் செல்லும் போது அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படும். சமூக விலகலுக்கான கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படும் என கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, உள்துறை, சுகாதார அமைச்சகங்கள் இப்பணியில் இணைந்து பணியாற்றுகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
07-மே-202019:20:01 IST Report Abuse
Sundar India in action
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X